முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர்ச்சியாக விளையாட முழு உடற்தகுதியுடன் இருக்கிறோம்: டோனி

சனிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, ஆக. - 18 - தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் முழு தகுதியோடு இருக்கிறோம் என்று டோனி தெரிவித்துள்ளார்.  இன்னும் சில நாட்களில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது இந்திய அணி. அதன் பிறகு இருபது ஓவர் உலக கோப்பை, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளது இந்திய அணி. இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட டோனி கூறுகையில், ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு ஒன்றரை மாத இடைவெளி இருந்ததால் முழு உடற்தகுதியோடு இருக்கிறோம். சமீபத்தில் முடிவடைந்த இலங்கைக்கு எதிராந தொடரில் கூட ஒவ்வொரு போட்டிக்கும் இடையே போதுமான இடைவெளி இருந்தது. அதனால் அடுத்து வரவுள்ள கிரிக்கெட் தொடர்களில் விளையாட நாங்கள் தயாராக இருக்கிறோம். யுவராஜின் வருகை அணிக்கும் வீரர்களின் ஓய்வறைக்கும் புதிய உற்சாகம் கொடுப்பதாக அமையும். அவர் இல்லாத போது அந்த வேலையை விராட்கோலி செய்தார் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago