நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட்: அணியில் பத்ரிநாத்

புதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, ஆக. 22 - நியூசிலாந்திற்கு எதிராக நடக்க இருக் கும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் பத்ரிநாத்திற்கு இடம் அளிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் ஐதராபாத்தைச் சேர்ந்த வி. வி.எஸ். லக்ஷ்மண் சர்வதேச போட்டிக ளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவி த்தார். எனவே அவருக்குப் பதிலாக பத் ரிநாத் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். 

நியூசிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் ரோஸ் டெய்லர் தலைமையில் இந்தி யாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் தோனி தலைமயிலான அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. 

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிக ளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்த திட்டமிடப் பட்டு உள்ளது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகளை நிர்வாகம் செய்து வருகிறது. 

இதன் முதல் போட்டி வரும் 23 -ம் தே தி துவங்க இருக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற இந்திய அணி தீவி ர பயிற்சியை மேற்கொண்டு உள்ளது. 

முன்னதாக நியூசிலாந்திற்கு எதிராக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ஐத ராபாத் வீரரான வி.வி.எஸ். லக்ஷ்மண் சேர்க்கப்பட்டு இருந்தார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் திடீர் என சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது இந்திய கிரிக்கெட்டிற்கு அதிர்ச்சி யை ஏற்படுத்தியது. 

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக டெ ஸ்ட் போட்டிகக்கான இந்திய அணியி ல் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின்டெண்டுல்கர், செளரவ் கங்குலி, ராகுல் டிரா விட் மற்றும் லக்ஷ்மண் ஆகிய 4 வீரர்க ள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். 

இதில் முன்னாள் கேப்டன் செளரவ் கங் குலி மற்றும் ராகுல் டிராவிட் ஆகி யோர் ஓய்வு பெற்று விட்டனர். 3- வது வீரராக லக்ஷ்மண் ஓய்வு பெற்றார். 

ஸ்டைலிஷ் பேட்ஸ்மேன் என்று வர்ணிக்கப்பட்ட வி.வி.எஸ். லக்ஷ்மண் ஓய்வு க்குப் பிறகு அவரது இடத்தை யாருக்கு அளிப்பது என்பது குறித்து தேர்வுக் குழு வினர் பல்வேறு வீரர்களின் பெயர்களை பரிசீலித்தனர். 

இதில் தமிழக வீரர் பத்ரிநாத் மற்றும் இந்திய ஏ அணியின் கேப்டனான தேஜே ஸ்வர் பூஜாரா உட்பட பல்வேறு வீரர்க ளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. 

இறுதியில் தமிழக வீரர் பத்ரிநாத்தை தேர்வுக் குழுவினர் தேர்வு செய்தனர். அவர் ஏற்கனவே டெஸ்ட் போட்டியில் பங்கேற்று இருக்கிறார். தவிர, இந்திய ன் பிரீமியர் லீக்கிலும் சிறப்பாக ஆடி வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: