முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு

ஞாயிற்றுக்கிழமை, 9 செப்டம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

பெய்ஜிங், செப். - 10 - சீனாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்தது. சுமார் ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர்.  சீனாவின் தென் மேற்கு பகுதியில் உள்ள யுனான் மற்றும் குய்ஸூ மாகாணங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. யுனான் மாகாணத்தில் உள்ள யில்லாங் பகுதியில் 2 முறை ஏற்பட்ட நிலநடுக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. நிலநடுக்கத்தினால் சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. 40 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.  மலைப் பகுதிகளில் உள்ள சாலைகளில் பாறைகள் விழுந்துள்ளதால் மீட்பு குழுவினர் மலை மீது ஏறி செல்ல தாமதமாவதால் மீட்பு வேலைகள் மெதுவாக நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட இடங்களை மீட்பு குழுவினர் அடைந்தால்தான் உயிரிழப்பு குறித்த முழு விபரம் தெரிய வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நில நடுக்கத்தினால் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு சுமார் ரூ. 3 ஆயிரம் கோடி இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அந்நாட்டு பிரதமர் வென் ஜியோபோ நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்