முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுரங்க ஒதுக்கீட்டில் ஏல முறையை அறிமுகப்படுத்த கோரிக்கை

சனிக்கிழமை, 22 செப்டம்பர் 2012      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி. செப். 22 - நிலக்கரி சுரங்க  ஒதுக்கீட்டில் ஏல முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று மத்திய  அரசுக்கு பாரதீய ஜனதா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் மத்திய  அரசுக்கு ரூ. 1.86 லட்சம் கோடிக்கு  இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு  தணிக்கை குழு  தனது அறிக்கையில்  கூறியுள்ளது.

இதற்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று  நாட்டின் பிரதான கட்சியான பாரதீய  ஜனதா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு உரிமங்களை  ஏல முறையில் வழங்க வேண்டும் என்றும்  இந்த ஏல முறையை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான  ஷாம்சேகர் சிங் மன்ஹாஸ்  கோரிக்கை விடுத்துள்ளார்.

தனியார் கம்பெனிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்றும்  நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு உரிமங்களை ஏல முறையில்தான் வழங்க வேண்டும் என்றும்  அவர் கேட்டுக்கொண்டார்.

 நிலக்கரி சுரங் ஊழலுக்கு  பிரதமர் மன்மோகன் சிங் தார்மீக மற்றும்  அரசியல் ரீதியான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர்  கேட்டுக்கொண்டார்.

இந்த ஊழல் விவகாரத்தில்  நியாயமான விசாரணை நடப்பதற்கு  ஏதுவாக  பிரதமர் மன்மோகன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 சிறப்பு புலனாய்வு  குழு  மூலம்  இந்த ஊழல் குறித்து  நியாயமான சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மானிய விலை சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடு,  சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி,  டீசல் விலை  உயர்வு ஆகியவற்றை  மத்திய  அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்