முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு எனக்கு தாய்நாடு தெலுங்குநடிகர் மோகன்பாபு பேட்டி

புதன்கிழமை, 31 அக்டோபர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை, அக்.- 31 - ஆந்திராவில் நான் பிரபலமாக இருந்தாலும் தமிழ்நாடு தான் எனக்கு தாய்நாடு என்று கூறினார் பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு. மஞ்சு எண்டர்டெய்மெண்ட் சார்பாக லட்சுமி மஞ்சு தயாரிக்கும் படம் `மறந்தேன் மன்னித்தேன்'. இப்படத்தை குமார் நாகேந்திரா இயக்கி உள்ளார். மோகன்பாபு மகன் விஷ்ணு, டாப்ஸி, ஆதி சந்திப், மோகன்பாபு மகள் லட்சுமிமஞ்சு என பலர் நடித்திருக்கிறார்கள். இளையராஜா இசையமைத்திருக்கிறார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இசை தட்டை இளையராஜா வெளியிட, மேடையில் இருந்த பிரபலங்கள் பெற்று கொண்டனர். இதற்கு முன்பு படத்தில் இடம் பெறும் ஆறு பாடல்களை ஒவ்வொரு சினிமா பிரபலங்கள் ஒவ்வொன்றாக திரையில் வெளியிட்டார்கள். அதில் நடிகர் பார்த்திபன், சுஹாசினி, ஏ.சி.சண்முகம், இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், நடிகர் தனுஷ், நடிகைகள் டாப்ஸி, லட்சுமி மஞ்சு என பலர் கலந்து கொண்டு பாடல்களை ஸ்கிரின் செய்தனர். பின்னர் தெலுங்கு நடிகர் மோகன்பாபு  நிருபர்களிடம் கூறியதாவது:- நான் தமிழ் நாட்டுக்கு வந்த போது காலில் செருப்பு இல்லாமல் இருந்தேன். சாப்பாடு, படுக்க இடம் இல்லை. அப்படிபட்ட என்னை தமிழ்நாட்டு மக்கள் தூக்கி விட்டார்கள். இப்போது மிகவும் பிரபலமான நபராக விளங்கி வருகிறேன். ஆந்திராவில் பிரபலமாக இருந்தாலும் தமிழ்நாடு தான் எனக்கு தாய்நாடு. இந்த மக்களை நானும் என் குடும்பமும் எந்த காலத்திலும் மறக்க மாட்டோம். என் மகன் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் `மறந்தேன் மன்னித்தேன்'. எனக்கு எப்படி என் வாழ்க்கை வளர்ச்சியில் உறுதுணையாக இருந்தீர்களோ, அதே போல என் பிள்ளைகளுக்கும் நீங்கள் துணையாக இருக்க வேண்டும். 57 படங்கள் தயாரித்துள்ளேன். தமிழில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறேன். இருந்த போதும் பிலிம் இண்டஸ்ட்ரி கஸ்டமானது. உனக்கு இந்த தொழில் வேண்டாம் என்று என் மகள் லட்சுமி மஞ்சுவிடம் கூறினேன். கேட்க மறுத்து விரும்பி சினிமா துறையில் இறங்கியிருக்கிறது. வெற்றி பெறும் என்று நம்புகிறேன். இந்திய அளவில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகள் இருந்தாலும் சினிமாவை  பொருத்தவரை  இங்கே உள்ள தொழில் நுட்ப கலைஞர்கள்  தான் சிறந்தவர்கள். இதை சொல்ல நான் தயங்கவில்லை.  எனக்கு தமிழ் முழுமையாக பேச வராது. என் நண்பர் ரஜினிகாந்த், டேய் நீ தமிழ் பேசாதே, நீ பேசும் தமிழ் ரொம்ப கொடுமையாக இருக்குது என்று கூறுவான். இப்போது நன்றாக தமிழ் பேசுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்