பாகிஸ்தான் கடல் பகுதியில் மீன் பிடித்ததாக 21 பேர் கைது

வியாழக்கிழமை, 22 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

இஸ்லாமாபாத், நவ.22 - இந்திய மீனவர்கள் 12 பேரை பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அரபிக் கடலில் இந்திய மீனவர்கள் 12 பேர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது  அங்கு வந்த பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு  அதிகாரிகள் மீனவர்களின் படகுகளை தடுத்து நிறுத்தினர்.

பாகிஸ்தான் எல்லைக்குள் மீன் பிடித்ததாகக் கூறி அவர்களை கைது செய்து, 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர். கடந்த ஒரு மாதத்தில்மட்டும்  இதுவரை 78 பேரை கைது செய்து பாகிஸ்தான் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். தற்போது கைதான 12 மீனவர்களும், பாகிஸ்தான் துறைமுக போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் செய்தித் தொடர்பாளர் முகமது பரூக் தெரிவித்தார். 

பாகிஸ்தான் மீனவர் அமைப்பின் பிரதிநிதி சசி மேனன் இதுபற்றி கூறியதாவது: பாகிஸ்தான் சிறையில் தற்போது 160 மீனவர்கள் உள்ளனர். இந்த ஆண்டு 676 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய கடல் எல்லைக்குள்  மீன் பிடித்ததாக பாகிஸ்தான் மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டு இந்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 64 பேரை இந்தியா விடுதலை செய்துள்ளது. இன்னும் 125 பேரை இந்கியா விடுதலை செய்ய வேண்டும். 

மீன் பிடித் தொழிலில் ஈடுபடும் இருநாட்டு மீனவர்களுக்கும் குறிப்பிட்ட தூரம் வரை கடலில் சென்று  மீன் பிடிக்க லைசென்ஸ் வழங்கலாம் என்று அவர் யோசனை தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: