முக்கிய செய்திகள்

இரட்டை இலை சின்னத்தை காணாமல் கொந்தளித்த மக்கள்

வியாழக்கிழமை, 14 ஏப்ரல் 2011      தமிழகம்
Leaf 1

திருப்பரங்குன்றம்,ஏப்.14 - திருப்பரங்குன்றம் தொகுதி மின்னணு வாக்கு எந்திரத்தில் இரட்டை இலை சின்னத்தில் காணாமல் வாக்காள பெருமக்கள் கொந்தளித்துப் போயினர். தமிழக சட்டசபை தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியை அ.தி.மு.க கூட்டணி தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கியுள்ளது. இதனால் மின்னணு எந்திரத்தில் இரட்டை இலை சின்னம் கிடையாது. ஆர்வத்துடன் வாக்காளர்கள் இரட்டை இலையை காணாது கொந்தளித்தனர். பின்னர் தே.மு.தி.க வாக்களித்தனர். வாக்குப் பதிவு அமைதியாக நடந்தது. சிறு அசம்பாவிதங்கள் கூட இல்லாத அளவிற்கு வாக்குப் பதிவு நடந்தது. தேர்தல் கமிஷனின் அதிரடி நடவடிக்கைகளால் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். இந்த ஆர்வத்தை பார்க்கும் போது தமிழகத்தில் கருணாநிதியின் ஆட்சிக்கு முடிவுக்கு வந்து விட்டதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர். நேற்று திருப்பரங்குன்றம் அருகே திருநகரில் ஓட்டளிக்க சென்ற ஒருவர் இரட்டை இலை சின்னத்தை கேட்டு தேர்தல் அதிகாரிகளிடம் புகார் செய்தார். அதிகாரிகள் சமாதனப்படுத்தி விளக்கமளித்து ஓட்டளிக்க செய்தனர். வாக்கு பதிவு முடியும் நேரம் மாலை 5 மணிக்கு ஏராளமான வாக்காளர்கள் வந்ததால் அவர்களுக்கு டோக்கன் கொடுத்து வாக்களிக்கும் படிஅதிகாரிகள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: