முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துப்பாக்கி படம்: ஏ சான்றிதழ் வழங்குவது குறித்து உத்தரவு

திங்கட்கிழமை, 28 ஜனவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன. 29 -​ நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி மத்திய தணிக்கை குழுவிற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஜய் நடித்து வெளியான துப்பாக்கி படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. 

இது தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் துப்பாக்கி படத்தில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய சில காட்சிகள் நீக்கப்பட்டன. 

இந்த நிகழ்ச்சியில் இப்படத்திற்கு வழங்கப்பட்ட யு சான்றிதழை ரத்து செய்து விட்டு ஏ சான்றிதழ் கொடுக்கும்படி மத்திய தணிக்கை குழுவிற்கு உத்தரவிடகோரி சென்னை ஐகோர்ட்டில் அப்துல் ரகீம் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பானுமதி மற்றும் சசீதரன் ஆகியோர் துப்பாக்கி படத்தை நேரில் பார்த்தனர். 

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. துப்பாக்கி படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை அரசு நீக்கிய விவகாரம் கோர்ட்டின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. 

மேலும் மனுதாரரின் கோரிக்கை குறித்து மத்திய தணிக்கை குழு வரும் மார்ச் மாதத்திற்குள் பரிசீலித்து முடிவெடுக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்