செக் மோசடி: கஸ்தூரி ராஜாவுக்கு சம்மன் அனுப்ப உத்தரவு

புதன்கிழமை, 13 பெப்ரவரி 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, பிப்.14 - செக் மோசடி வழக்கில் சினிமா இயக்குநர் கஸ்தூரி ராஜா, மார்ச் 4-ந்தேதி நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப சென்னை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னையை சேர்ந்த சினிமா பைனான்ஸ்சியர் போத்ரா, சினிமா இயக்குநர் கஸ்தூரி ராஜாவுக்கு எதிராக சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கஸ்தூரி ராஜா, தன்னிடம் வாங்கிய ரூ.65 லட்சம் கடன் தொகைக்கு 2 காசோலைகளை கொடுத்தார். 

அதில் ரூ.25 லட்சத்திற்கு கொடுக்கப்பட்ட காசோலை அவரது வங்கி கணக்கில் பணம் இருப்பு இல்லாமல், திருப்பி வந்துவிட்டது.

இதுகுறித்து கஸ்தூரி ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டேன். ஆனால், அவர் பதில் தெரிவிக்கவில்லை. எனவே, அவரை செக் மோசடி சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று போத்ரா கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை 8-வது ஜார்ஜ் டவுன் மாஜிஸ்த்ரேட் விஜயராணி, இதுகுறித்து மார்ச் 4-ந்தேதி அன்று ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கஸ்தூரி ராஜாவுக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: