அதிமுக பிரமுகர்கள் நீக்கம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.15 - புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த  அதிமுக நிர்வாகிகள் 2பேரும், பெரம்ர் பகுதியைச்சேர்ந்த ஒருவரும் கட்சிக்கட்டுப்பாட்டை மீறியதாக அதிமுகவில் இருந்து நீக்கிவைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அதிமுக கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், அதிமுகவின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், வடசென்னை வடக்கு மாவட்டம் பெரம்ர் பகுதி 2-வது கிழக்கு  வட்டக்கழக செயலாளர்  வி.குகவள்ளி, புதுக்கோட்டை நகராட்சி 1-வது வார்டு உறுப்பினரும், புதுக்கோட்டை சட்டமன்றத்தொகுதி கழகச்செயலாளருமான  ஆர்.செல்வராஜன், புதுக்கோட்டை  ஒன்றிய இலக்கிய  அணிச்செயலாளர்  முத்தாள் என்கிற  முத்துக்குமார்  ஆகியோர் இன்று முதல்  கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கிவைக்கப்படுகிறார்கள். அதிமுக தொண்டர்கள் யாரும் இவர்களுடன் எவ்விதத்தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: