முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொட்டுசுரேஷ் கொலை: 2 பேர் மதுரை கோர்ட்டில் ஆஜர்

வெள்ளிக்கிழமை, 15 பெப்ரவரி 2013      அரசியல்
Image Unavailable

 

மதுரை,பிப்.16  - பொட்டுசுரேஷ் கொலை வழக்கில் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்த மேலும் 2 பேர் நேற்று மதுரை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.  திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பருமான சுரேஷ்பாபு என்ற பொட்டுசுரேஷ் கடந்த மாதம் 31ம் தேதி மதுரை டிவிஎஸ் நகரில் 7பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக மதுரை கீரைத்துறையை சேர்ந்த சபாரத்தினம், சந்தானம், ஆசாமுருகன், லிங்கம், சேகர், செந்தில், கார்த்திக் ஆகிய 7 பேர் நத்தம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இவர்கள் போலீஸ்காவல் முடிந்து மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். போலீஸ் விசாரணையில் கொலை குறித்து சரியான எந்த  தகவலும் கிடைக்காத நிலையில் நேற்று முன்தினம் அட்டாக்பாண்டியின் சகோதரி மகன் விஜய்பாண்டி, அவரது நண்பர் ஆரோக்கிய பிரபு ஆகியோர் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். சரண்  அடைந்த அவர்கள் சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

  இந்த நிலையில் விஜய்பாண்டி, ஆரோக்கிய பிரபு ஆகியோர் நேற்று மதுரை 4வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதற்கிடையில் போலீசார் போலீஸ் காவல் கேட்டு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் ராஜலிங்கம் அளித்த உத்தரவில்,சேலம் கோர்ட்டில் சரண் அடைந்ததற்கான ஆவணங்கள் எதுவும் வராத நிலையில் போலீஸ்காவல் கொடுக்க முடியாது என்று கூறி வழக்கை வருகிற 18ம் தேதிக்கு தள்ளி வைத்தார். அன்று விஜய்பாண்டியையும், ஆரோக்கிய பிரபுவையும் ஆஜர்படுத்தவேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து இருவரும் சேலம் கொண்டு செல்லப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

   பொட்டு சுரேஷ் கொலையில் சரண் அடைந்தவர்கள் சேலம் மத்திய சிறையில்தான் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த போது கொலையை யார் செய்ய சொன்னார்கள் என்பது குறித்த எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இந்த கொலைக்கு அட்டாக் பாண்டிதான் காரணம் என்று போலீசார் கூறி வந்தாலும் அதற்கான எந்த ஆதாரமும், வாக்குமூலமும் இல்லை. இந்த நிலையில் திடீரென சேலம் கோர்ட்டில் இருவர் சரண்அடைந்து அவர்களும் சேலம் சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சிறையில் உள்ள கொலையாளிகளை சந்தித்து பேசவே இவர்கள் 2  பேரும் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்து சேலம் சிறைக்கு சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது. இதனால் வழக்கு திசை திரும்பவதற்கு வாய்ப்புள்ளாதகவும் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்