முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலை நிறுத்தத்தை கைவிட பிரதமர் வேண்டுகோள்

திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2013      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, பிப்,. 19 - நாளை மற்றும் நாளை மறுநாள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட வேண்டுமென தொழிற்சங்கங்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது, தொழிலாளர் நலச் சட்டங்கள் மீறப்படுவது உள்ளிட்டவற்றை கண்டித்து ஏ.ஐ.டி.யூ.சி உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்கள் இரு நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளந. இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் வேலை நிறுத்தப் போராட்டத்தால் நாட்டுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும். மக்களும் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாவார்கள். பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்த்து கொள்ள வாய்ப்பு உள்ளது. 

எனவே தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த முடிவை கைவிட்டு பேச்சு நடத்த முன்வர வேண்டும். தொழிற்சங்கத்தினருடன் இது தொடர்பாக பேசுமாறு ஏ.கே. அந்தோணி, ப. சிதம்பரம், சரத்பவார், தொழிலாளர் துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரிடம் கூறியுள்ளேன். இதில் தொழிற்சங்கங்களும் அரசு தரப்பும் ஏற்றுக் கொள்ளும் முடிவு எட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். 

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஏ.ஐ.டி.யூ.சி பொதுச் செயலாளர் குருதாஸ் தாஸ் குப்தா, முதல் முறையாக அனைத்து தொழிற்சங்கங்கும் இணைந்து போராட்டத்தில் இறங்கியுள்ளன. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது, தொழிலாளர் நல சட்டங்களை அமல்படுத்தாதது ஆகியவற்றை கண்டித்து வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. பல்வேறு துறைகளில் பணிபுரியும் சுமார் 10 கோடி பணியாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்