சோம்நாத் பிரச்சாரம் செய்யவந்தால் வரவேற்போம்: பிரகாஷ்காரத்

சனிக்கிழமை, 23 ஏப்ரல் 2011      இந்தியா
prakash karat

 

கொல்கத்தா,ஏப்.- 23 - சட்டமன்ற தேர்தலில் இடதுசாரி கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி முன்வந்தால் வரவேற்போம் என்று மார்க்சிஸ்டு கம்யூஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத் தெரிவித்துள்ளார்.  கொல்கத்தாவில் நிருபர்களுக்கு பேட்டியளித்த மார்க்ஸிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் இது குறித்து மேலும் கூறியதாவது:-

மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் தேர்தலில் இடதுசாரி கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சோம்நாத் சாட்டர்ஜி, டாக்டர் அசோக் மித்ரா ஆகியோர் முன்வந்தால் அவர்களை வரவேற்போம். எங்களது கூட்டணியை ஆதரித்து பேச யார் வந்தாலும் அவர்களை வரவேற்போம். இந்த விஷயத்தில் தெளிவான முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எடுத்திருக்கிறது. மேற்கு வங்க தேர்தலில் இடதுசாரி கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று 8 வது முறையாக ஆட்சி அமைக்கும். கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சிக்கு எதிராக அலை ஏதும் வீசவில்லை என பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன. அதே நிலைதான் இங்கும் நீடிக்கிறது என்றார் பிரகாஷ் காரத். 

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை மார்க்சிஸ்ட் கட்சி வாபஸ் பெற்ற போது அப்போது மக்களவை தலைவராக இருந்த சோம்நாத் சாட்டர்ஜி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்து விட்டார். இதையடுத்து அவரை கட்சியில் இருந்து மார்க்சிஸ்ட் கட்சி நீக்கியது. இந்நிலையில் சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டணியை ஆதரித்து மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். 

இதை ஷேர் செய்திடுங்கள்: