அமெரிக்காவில் பாபி ஜின்டாலுக்கு ஆதரவு சரிகிறது

புதன்கிழமை, 3 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

வாஷிங்டன், ஏப். 4 - 2016 ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லூசியானா மாகாண கவர்னர் பாபி ஜின்டாலுக்கு ஆதரவு குறைந்து வருகிறது. ஜார்ஜ் புஷ் சார்ந்த குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் அடுத்த தேர்தலில் ஒபாமா சார்ந்துள்ள ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரை எதிர்த்து ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட பரிந்துரைக்கப்படலாம் என்று பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் ஜின்டாலுக்கு ஆதரவு பெருமளவு சரிந்துள்ளது தெரியவந்துள்ளது. அவருக்கு இப்போது 38 சதவீத ஆதரவே உள்ளது. அவரது சொந்த மாகாணமான லூசியானாவிலேயே அதிபர் பராக் ஒபாமாவை விட பின்தங்கியுள்ளார் ஜின்டால்.

லூசியானாவில் இரண்டாவது முறையாக ஜின்டால் கவர்னராக இருப்பது குறிப்பிடத்தக்கது. 41 வயதான ஜின்டாலுக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் 51 சதவீத ஆதரவு இருந்தது. இது இப்போது 38 சதவீதமாக சரிந்துள்ளது. அதே நேரத்தில் குடியரசுக் கட்சியின் சார்பில் லூசியானா கவர்னர் பதவிக்கு போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படும் ஜின்டாலின் இரு போட்டியாளர்களான ஜே டார்டென், டேவிட் விட்டெர் ஆகியோருக்கு ஆதரவு 60 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: