தமிழ் படஉலகம் உலகத்திற்கு தெரிய வேண்டும் - கமல்ஹாசன்

Kamal1

 

சென்னை, ஏப்.26 - தமிழ், தெலுங்கு படஉலகம் பிரம்மாண்டத்தின் வெளி உலகத்திற்கு தெரிய வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார். தெலுங்கில் ரெக்கார்ட் பிரேக் பண்ணிய படம். இந்த சாதனையை இதற்கு முன்பு வந்த படங்கள் எதுவும் முறியடிக்கவில்லையாம் அங்கே. மஹதீரா படத்தின் இந்த பிரமாண்ட பில்டப்புக்கு தமிழக ரசிகர்களும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.  

மாவீரன் என்ற பெயரில் வெளிவரப்போகும் இப்படம் நேரடி தமிழ் படத்தை எப்படி வெளியிடுவார்களோ, அத்தனை களேபரங்களுடன் வெளியிட தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. மணிரத்னம், கமல் இருவரும் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்கள். படத்தின் நாயகன் ராம்சரண் தேஜா, தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், இயக்குனர் ராஜா மவுலி ஆகியோரும் கலந்து கொண்டார்கள். சிரஞ்சீவியின் மகன்தான் ராம் சரண். எனவே சிரஞ்சீவியிலிருந்தே தனது உரையை ஆரம்பித்தார் கமல். நானும் சிரஞ்சீவியும் இதோ பக்கத்து தெருவில்தான் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறோம். அப்போது நாங்க வளர்கிற கலைஞர்களாக இருந்தோம். இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கும் என்று அப்போது நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ராம்சரணை வாழ்த்துகிற கடமை எனக்கு இருக்கிறது. அதனால்தான் வந்தேன். தெலுங்கிலும் சரி, தமிழிலும் சரி, இப்படியெல்லாம் படங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதே வெளியுலகத்திற்கு தெரிவதில்லை. அவர்கள் பார்வையில் இந்திய சினிமா என்றால் அது மும்பையில் எடுக்கப்படுகிறது என்பதுதான். இந்த எண்ணத்தை முறியடிக்க நாம் கைகோர்க்க வேண்டும். தெலுங்கு​ தமிழ் இன்டஸ்ட்ரி கைகோர்த்தால்தான் அது நடக்கும். அதற்காக மும்பையில் தயாராகும் படங்களை ஒருகை பார்த்துவிட வேண்டும் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. விட்டால் பாகிஸ்தானில் கூட போய் படம் எடுக்கலாம். கலைக்கு எல்லை கிடையாது என்றார் கமல். சென்னையிலுள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில்தான் படித்தாராம் ராம்சரண். அப்பள்ளியின் நிர்வாகிகளில் ஒருவரான மதுவந்தியே இதை மேடையில் ஏறி உறுதிபடுத்தியது தனி ஆர்வத்தை ஏற்படுத்தியது பார்வையாளர்களுக்கு,  எஸ்.பி.பி.சரண்​திவ்யாவின்  ஆகியோர் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ