முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த பிரதமராக மோடி: சி.என்.என் சர்வேயில் தகவல்

வியாழக்கிழமை, 23 மே 2013      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, மே. 24 - 10வது ஆண்டாக பிரதமராக தொடரும் மன்மோகன்சிங்கின் செயல்பாடுகளில் மக்கள் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமராக வர பெரும் ஆதரவு இருப்பதாகவும் சி.என்.என். மற்றும் ஐ.பி.என். தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 5 வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இதையொட்டி பல ஊடகங்களும் மக்கள் மத்தியில் கருத்துக் கணிப்புகளை நடத்தி வெளியிட்டிருக்கின்றன. பொதுவாக ஆளும் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தியே வெளியாகி இருக்கிறது. அத்துடன் இப்போது தேர்தல் நடந்தால் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக இருக்கும் என்றும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்றும் இந்த கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்