முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாகாண அதிகாரங்களைப் பறிக்க இலங்கை அரசு நடவடிக்கை

வியாழக்கிழமை, 6 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

கொழும்பு, ஜூன்.7  - இந்தியாவின்  ஆட்சேபத்தை மீறி, மாகாண நிர்வாகக் கவுன்சில்களின்  அதிகாரங்களைப் பறிக்கும்  தனது திட்டத்தை  முன்னெடுத்துச் செல்ல  இலங்கை  அரசு முடிவு செய்துள்ளது.  இந்தியாவின்  தூண்டுதல்  காரணமாக, மாகாணங்களுக்கு  பல்வேறு  அதிகாரங்களை   வழங்கும்  வகையில்  இலங்கை  அரசமைப்புச் சட்டத்தில்  13 வது  திருத்தம்  கடந்த 1987 இல் செய்யப்பட்டது.  இந்தத்  திருத்தத்தின்படி  மாகாணங்களுக்கு போலீஸ் மற்றும்  நில அதிகாரங்களைத் தரக்கூடாது என்றும் அது நாட்டின்  பிரிவினைக்கே  வழிவகுக்கும்  என்றும் இலங்கை ஆளும் கூட்டணிக் கட்சிகள்  அரசை வலியுறுத்தி  வருகின்றன.   எனினும்,  13 வது  சட்டத்திருத்தத்தை  அமல்படுத்தி மாகாணங்களுக்கு  அதிகாரம்  வழங்க வேண்டும்  என்றும்  இந்தியாவும், இலங்கையில்  உள்ள தமிழர்  அரசியல்  கட்சிகளும் கோருகின்றன. இந்நிலையில்,   13 வது சட்டத் திருத்தத்தை  மாற்றி,  பழைய  நிலைக்கு அரசமைப்புச் சட்டத்தைக் கொண்டுவர  இலங்கை  அரசு திட்டமிட்டுள்ளது.  இந்தியா மற்றும்  தமிழர்  கட்சிகளின்  ஆட்சேபங்களை மீறி  இந்த நடவடிக்கையை  முன்னெடுத்துச் செல்ல அரசு  முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அரசமைப்புச் சட்டத்தில்  இவ்வாறு  புதிய திருத்தம்  கொண்டு வரப்பட்டால், மாகணங்களின்  அதிகாரங்கள் பறிக்கப்படும். மேலும் அவை ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும்.  புதன்கிழமை  நடைபெறும் கேபினட் கூட்டத்தில், மாகாணங்களுக்கான அதிகாரங்களைப்  பறிப்பது  தொடர்பான  திருத்த  வரைவைச் சமர்ப்பிப்பது என்று ஆளும்  கூட்டணியில்  இடம் பெற்றுள்ள கட்சித் தலைவர்கள் முடிவு செய்தனர். இதனிடையே,  தமிழர்கள்  பெரும்பான்மையாக  வாழும்  வடக்கு மாகாணக் கவுன்சிலுக்கு  வரும் செப்டம்பர்  மாதம் தேர்தலை நடத்துவது  என்பதில்  அதிபர்  ராஜபட்ச  உறுதியாக  இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago