ஐ.பி.எல். சூதாட்டம்: ஓட்டல் அதிபருக்கு மீண்டும் சம்மன்

சனிக்கிழமை, 8 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.9 - ஐ.பி.எல்.சூதாட்டம் தொடர்பாக ஓட்டல் அதிபருக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர். ஐ.பி.எல். சூதாட்டத்தில் சென்னையை சேர்ந்த ஓட்டல் அதிபர் விக்ரம் அகர்வால் என்கிற விக்ரமுக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது. அவரது நட்சத்திர ஓட்டலில் வைத்து சூதாட்டம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

சூதாட்ட தரகர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்து இருந்ததாகவும் தெரிகிறது. இதைத்தொடர்ந்து ஓட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலை விசாரணை செய்வதற்காக கடந்த மாதம் 23-ந்தேதி அன்று சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

ஆனால் 30-ந்தேதி அவர் ஆஜராகவில்லை. மறுநாள் விக்ரம் அகர்வால் மும்பை குற்றப்பிரிவு போலீசில் ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திவிட்டு திருப்பி அனுப்பிவிட்டனர்.

இதைத்தொடர்ந்து அவருக்கு 2-வது முறையாக சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பியது. கடந்த 5-ந்தேதியும் விக்ரம் அகர்வால் ஆஜராகவில்லை. அதே நேரத்தில் 5-ந்தேதி அவரது மனைவி வந்தனாவும், வக்கீலும் விசாரணை அதிகாரிகளை சந்தித்தனர். விக்ரம் அகர்வால் விசாரணைக்கு ஆஜராக ஒரு வார கால அவகாசம் அளிக்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர். இந்த நிலையில் ஓட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலுக்கு புதிய சம்மனை சி.பி.சி.ஐ.டி அனுப்பியது. அடுத்த வாரம் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: