முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.எஸ்.எஸ். தலைவருடன் நிதின் கட்காரி சந்திப்பு

புதன்கிழமை, 19 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஜூன். 20 - பா.ஜ.க. முன்னாள் தலைவர் நிதின் கட்காரி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார். பா.ஜ.க. வில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்ட பிறகு அக்கட்சியின் முன்னாள் தலைவர் நிதின் கட்காரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத்தை நேற்று டெல்லியில் வைத்து சந்தித்து பேசியுள்ளார். பா.ஜ.க. வில் மோடிக்கு முக்கிய பதவி வழங்கிய பிறகு கட்காரி பகவத்தை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பகவத் பா.ஜ.க. தலைவர் எல்.கே. அத்வானியை நேற்று  சந்தித்து பேசினார். பாஜக பிரச்சாரக் குழு தலைவராக குஜராத் முதல்வர் மோடி நியமிக்கப்பட்டவுடன் அத்வானி கட்சி பொறுப்புகளை ராஜினாமா செய்த போது அவரை அதை வாபஸ் பெற வைத்தவர்களில் பகவத்தும் ஒருவர். பகவத் அத்வானியை சந்திக்கும் முன்பு தான் அவரை கட்காரி சந்தித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்