முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. பிரமுகர்கள் மரணம்: முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.6 - அ.தி.மு.க. பிரமுகர்கள் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:- முதல்-அமைச்சர் ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:- தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி கழக இணைச் செயலாளரும், பாலக்கோடு ஒன்றிய மாணவர் அணி இணைச் செயலாளருமான அழகேசன், விழுப்புரம் வடக்கு மாவட்டம், மயிலம் ஒன்றிய விவசாயப் பிரிவு செயலாளர் அரிஓம்தாஸ் ஆகியோர் சாலை விபத்தில் அகால மரணமடைந்து விட்டனர் என்று செய்தி கேட்டும், திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு ஒன்றிய கழக அவைத் தலைவர் துரைப்பாண்டி, காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் பரங்கிமலை கிழக்கு ஒன்றியக் கழக மாவட்ட பிரதிநிதி கே.பி.விஜய் ஆகியோர் மரணமடைந்து விட்டனர் என்ற செய்தி கேட்டும் மிகுந்த வருத்தமுற்றேன்.

மதுரை புறநகர் மாவட்டம், மதுரை கிழக்கு மாவட்டம் கிழக்கு ஒன்றியம், ராஜாக்கூர் கிளைக் கழகத்தைச் சேர்ந்த டி.சிவதேவன் முன்விரோதம் காரணமாக தி.மு.க.வினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

இந்தப் படுகொலையைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அன்பு சகோதரர்கள் அழகேசன், அரிஓம்தாஸ், துரைப்பாண்டி, விஜய் மற்றும் டி.சிவதேவன் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony