முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானா தொடர்பாக மசோதா கொண்டு வர வேண்டும்

சனிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஆக. 25 - நடப்பு பாராளுமன்ற கூட்டத் தொடரை நீட்டிக்க காங்கிரஸ் அரசு விரும்புவதால் தெலுங்கானா புதிய மாநிலம் அமைப்பது தொடர்பாக உடனடியாக மசோதா கொண்டு வந்து அதை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்று லோக்சபை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தி உள்ளார். அப்படி மசோதா கொண்டு வந்தால் அதை நாங்கள் ஆதரிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர், தெலுங்கானா விஷயத்தில் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது. புதிய மாநிலம் அமைப்பதில் காங்கிரஸ் கட்சி சீரியசாகவே இல்லை என்று குற்றம் சாட்டினார். காங்கிரசும் சரி, காங்கிரஸ் அரசும் சரி, தெலுங்கானா விஷயத்தில் விளையாடுகின்றன என்று குற்றம் சாட்டிய அவர், ஆந்திர மாநில விஷயத்தில் நிச்சயமற்ற தன்மையே நிலவுகிறது. அப்படி ஒரு சந்தேகம் தெலுங்கானாவை ஆதரிப்பவர்கள் மத்தியில் எழுந்து விட்டது என்றும் குற்றம் சாட்டினார். தெலுங்கானாவை நாங்கள் எப்போதும் ஆதரிக்கிறோம். எனவே பாராளுமன்றத்தில் மசோதா வந்தால் அதை பா.ஜ.க. ஆதரிக்கும். எனவே மசோதாவை உடனடியாக கொண்டு வருமாறு நான் அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். அப்போதுதான் ஆந்திராவில் அமைதி திரும்பும் என்று சுஷ்மா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்