முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்

வெள்ளிக்கிழமை, 13 மே 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, மே13 - ஹசன் அலிகான் என்பவருக்கு எதிரான கறுப்பு பண வழக்கில்  அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவிடம் எந்த தகவலையும் கொடுக்காமல் தன்னிச்சையாக குற்றப்பத்திரிகையை  தாக்கல்  செய்ததற்கு சுப்ரீம்  கோர்ட்டு  கடும்  கண்டனம் தெரிவித்துள்ளது. புனேயைச்  சேர்ந்த குதிரை பண்ணை அதிபர் ஹசன் அலிகான் வெளிநாடுகளில் பல ஆயிரம் கோடி கறுப்பு பணத்தை மறைத்து வைத்திருக்கிறார் என்று புகார்கள் எழுந்ததை அடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. இதனை அடுத்து ஹசன் அலி மீது மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள்  வழக்கு பதிவு  செய்தனர்.

இந்த  வழக்கு விசாரணையை கண்காணிக்க உயர் மட்ட குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது.

ஆனால் இக்குழுவிற்கு எந்த  தகவலும் கொடுக்காமல் கடந்த 6 ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஹசன் அலி மற்றும் இதர குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிகையை  தாக்கல்  செய்தனர்.

இதற்கு சுப்ரீம் கோர்ட்டு  கடும்  கண்டனம் தெரிவித்துள்ளது.

இவ்வழக்கில் கடந்த 4 ம் தேதி நடந்த விசாரணையின்போது கூட இப்படி ஒரு குற்றப்பத்திரிகையை மே 6 ம் தேதி தாக்கல்  செய்கிறோம் என்று அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் குறிப்பிடவில்லை என்றும், இதுவும் கண்டிக்கத்தக்கது என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

மத்திய அரசால் அமைக்கப்பட்ட உயர்  மட்டக்குழுவிடம்  இந்த குற்றப்பத்திரிகை விபரங்களை முன்வைக்காமலேயே அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கோர்ட்டில் தாக்கல்  செய்திருப்பது வியப்பை அளிக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டு  நீதிபதிகள் பி.சுதர்சன் ரெட்டி, எஸ்.எஸ்.நிஜ்ஜார் ஆகியோர் அடங்கிய  டிவிஷன் பெஞ்ச் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!