முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-சீனா இடையே எல்லை பாதுகாப்பு உள்பட 9 ஒப்பந்தம்

புதன்கிழமை, 23 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

பெய்ஜிங்,அக்.24 - இந்தியா_சீனா இடையே எல்லை பாதுகாப்பு உடன்பாடு மற்றும் 8 ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் சீன பிரதமர் லீ கெகியாங்கிற்கும் இடையே நீண்டநேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

பிரதமர் மன்மோகன் சிங் ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு நேற்றுமுன்தினம் சீன தலைநகர் பெய்ஜிங் நகருக்கு சென்றார். பெய்ஜிங் விமான நிலையத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கை சீன வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் உயரதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் மன்மோகன் சிங்கிற்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. அதை மன்மோகன் சிங் பார்வையிட்டார். அதன் பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கை சீன பிரதமர் கெகியாங் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு அதிகாரிகளும் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் இருநாடுகளிடையே எல்லை பாதுகாப்பு உடன்பாடு மற்றும் இதர துறைகளில் 8 ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. எல்லை பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இந்திய ராணுவ செயலாளர் ஆர்.கே.மாத்தூர், சீன ராணுவ துணைத்தலைமை தளபதி சுன் ஜியான்குவா ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தப்படி இருநாடுகளின் எல்லையில் அமைதியை நிலைநாட்டுவது, ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதை நிறுத்துதல், ராணுவ பலத்தை காட்டக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இருநாடுகளிடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதில் எல்லை பாதுகாப்பு உடன்பாடு மிகவும் முக்கியமானதாகும். இருநாடுகளிடையே ஓடும் நதிகள் நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாகவும் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.  இருநாடுகளிடையே உறவு வளர்ந்து மக்கள் முன்னேற்றம் அடைய வேண்டுமானால் எல்லையில் அமைதி நிலவுவது அவசியம் என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

ஒப்பந்தத்திற்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மன்மோகன் சிங், பேச்சுவார்த்தை மட்டுமல்லாது சீன பயணம் பயனுள்ளதாகவும் ஆக்கப்பூர்வமாகவும் உள்ளது என்றார். பின்னர் சீன பிரதமர் லீ பேட்டி அளிக்கையில் இந்த ஒரு வருடத்தில் நாங்கள் இருவரும் இரண்டுமுறை சந்தித்து பேசியுள்ளோம். கடந்த 1954_ம் ஆண்டில் தான் ஜவஹர்லால் நேருவும் சூயன் லாயும் இரண்டுமுறை சந்தித்து பேசினார்கள். அதன் பின்னர் நாம் இருவரும் இரண்டுமுறை சந்தித்து பேசியுள்ளோம் என்றார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago