முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏ.டி.பி. வேர்ல்டு டூர் இறுதிப் போட்டி: ஜோகோவிச் சாம்பியன்

புதன்கிழமை, 13 நவம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், நவ. 14  - இங்கிலாந்தில் நடைபெற்ற ஏ.டி.பி. வேர்ல்டு டூர் இறுதிச் சுற்றில் செர்பிய வீரர் ஜோகோவிச் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார். 

பரபரப்பாக நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் நோவக் ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலை வீழ்த்தி பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. 

ஆடவருக்கான ஏ.டி.பி. சுற்றுப் பயணப் போட்டிகளில் ஒன்றான வேர்ல்டு டூர் பைனலஸ் இங்கிலாந்து நாட்டின் தலைந கரான லண்டனில் கடந்த 2 வார காலமாக நடைபெற்றது. 

இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் களம் இறங்கினர். 2 வார காலமாக நடந்த இந்தப் போட்டி நே ற்று முன் தினத்துடன் முடிவடைந்தது. 

சர்வதேச அளவில் முக்கிய போட்டிகளில் ஒன்றான இதில் பங்கேற்ற முன்னணி வீரர்கள் தரமான ஆட்டத்தை வெளிப்படு த்தி ரசிகர்களை மகிழ்வித்தனர். 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத் தைக் கைப்பற்ற தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள நடாலும், இரண்டாம் இடத்தில் உள்ள ஜோகோவிச்சும் மோதினர். 

ஆரம்பத்தில் இருந்தே அசத்தலான ஆட்டத் தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 6_3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற் றினார். 

பின்பு 6_4 என்ற கணக்கில் இரண்டாவது செட்டையும் தனது வசமாக்கினார். இத னால் நேர் செட்டுகளில் ஜோகோவிச்           வெற்றி பெற்று பட்டம் வென்றார். 

இதன் மூலம் 3_வது முறையாக அவர் இத் தொடரில் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, இந்த பட்டத்தை தொடர்ந்து தக்கவைத்து கொண்ட 8 _வது வீரர் என்ற பெருமையும் பெற்றார். 

ஆட்டம் முடிந்த பின் ஜோகோவிச் கூறு கையில், இந்த வெற்றிக்குப் பின்னால் இரு க்கும் எனக்குப் பயிற்சி அளித்தவர்களுக்கு நன்றி என்றார். 

அமெரிக்க ஓபன் தொடரின் இறுதிப் போ ட்டியில் நடாலிடம் தோல்வி அடைந்த பின் ஜோகோவிச் எழுச்சி பெற்றுள்ளார். 

பெய்ஜிங், ஷாங்காய் மற்றும் பாரிஸ்லேண்ட் உள்ளிட்ட அடுத்தடுத்த தொடர்க ளின் மூலம் 22 ஆட்டங்களில் ஜோகோ விச் தொடர் வெற்றி பெற்றுள்ளார். 

இதன் மூலம் செக். குடியரசுக்கு எதிராக          வெள்ளிக் கிழமை துவங்கும் டேவிஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் செர்பிய அணிக்கு பட்டம் வென்று தரக் காத்திருக் கிறார். 

முழங்கால் காயத்தில் இருந்து மீண்டு வந்து அசத்திய நடால், இந்த ஆண்டு இறுதிவ ரை தரவரிசையில் முதல் இடத்தில் நீடிப் பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜோகோவிச்சின் தொடர் வெற்றி அதற்கு முட்டுக் கட்டை போடலாம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்