திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம்

புதன்கிழமை, 18 மே 2011      ஆன்மிகம்
Tirupathi

நகரி, மே.19 - திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கருடசேவையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ரூ.300 கட்டண தரிசனத்திற்கு 4மணி நேரமும் இலவச தரிசனத்திற்கு 9மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. நேற்று முன்தினம் இரவு ஏழுமலையான் கருட வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமாக திரண்டிருந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருப்பதி கோவிலுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து போலீசார் மோப்ப நாய்களுடன் கோவிலில் அதிரடி சோதனை நடத்தினர். வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: