நைஜீரிய வாலிபர்கள் கைது

Image Unavailable

 

சென்னை, ஜன.16 - திருச்சியில் உரிய ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக தங்கியிருந்த 7 நைஜீரிய வாலிபர்கள் கைதுசெய்யப்பட்டு அவர்களின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். 

திருச்சியில் 7 நைஜீரிய வாலிபர்கள் சட்ட விரோதமாக தங்கியிருப்பதாக மத்திய அரசுக்கு தகவல் கிடைத்தது.  அவர்களால் நாட்டின் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படக்கூடும் என்பதால் அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறியது. 

போதைப் பொருள் கடத்தல் மற்றும் கள்ளநோட்டை புழக்கத்தில் விடுதல் போன்ற சட்டவிரோத செயல்களில் அவர்கள் <டுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து திருச்சி போலீசார் அந்த நைஜீரிய வாலிபர்களை தேடி வந்தார்கள். 

அவர்கள் ஒரு விடுதியில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து திருச்சி போலீசார் அந்த வாலிபர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 7 நைஜீரிய வாலிபர்களும் சென்னைக்கு கொண்டு வரப்பட்டனர்.   சென்னையில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் அபுதாபி வழியாக நைஜீரிய நாட்டிற்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ