முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடி விசா கோரி விண்ணப்பிக்கலாம்: அமெரிக்க அதிகாரி

சனிக்கிழமை, 1 பெப்ரவரி 2014      இந்தியா
Image Unavailable

 

வாஷிங்டன், பிப். 2 - அமெரிக்க விசாவுக்கு நரேந்திர மோடி விண்ணப்பிக்கலாம், ஆனால் மற்ற விண்ணப்பதாரர்கள் போலவே அவரது விண்ணப்பமும் ஆய்வு செய்யப்படும் என அமெரிக்க வெளியுறவுத் துறை துணை செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ஃப் தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டிருந்த அமெரிக்க விசா கடந்த 2005-ஆம் ஆண்டு திரும்பப் பெறப்பட்டது. குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின் அடிப்படையில் போடிக்கு வழக்கப்பட்ட விசா திரும்பப் பெறப்பட்டது.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்குவதில்லை என்ற கொள்கையை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று கூறி, அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

மத சுதந்திரத்துக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மோடிக்கு விசா வழங்கக் கூடாது என்று அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில், அமெரிக்கா விசா பெற மோடி விரும்பினால் தாராளமாக விண்ணப்பிக்கலாம். மற்ற விண்ணப்பதாரர்கள் போலவே அவரது விண்ணப்பமும் ஆய்வு செய்யப்படும் என்ற நிலைப்பாட்டை தங்கள் நாடு பலமுறை வலியுறுத்தியிருப்பதாக மேரி ஹார்ஃப் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்