ராமேசுவரம் மீனவர்களை மீன்டும் சிறைபிடிப்பு

புதன்கிழமை, 5 பெப்ரவரி 2014      தமிழகம்
Image Unavailable

 

ராமேசுவரம்,பிப்,6 - கச்சத்தீவு,தனுஸ்கோடி கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 15 பேரை புதன் கிழமை காலையில் இலங்கை கடற்படையினர்  சிறைபிடிக்கப்பட்டனர். ராமேசுவரம் பகுதியிலிருந்து சென்ற சில மணி நேரத்தில் மீனவர்களை  சிறைபிடித்ததால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  

ராமேசுவரம்  பகுதியிலிருந்து புதன் கிழமை காலையில் 589 விசைப்படகுகளில் மீனவர்கள்  மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.தலைமன்னார்,தனுஸ்கோடி பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம்  தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த சுவிட்டர்,கான்ஸ் ஆகியோரின் படகில் சென்ற15 மீனவர்களை சிறைப்பிடித்தனர். மீனவர்களை மாலைவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவில்லை.மேலும் மீனவர்களை இன்று நீதிமன்றத்தில்  ஆஜர் படுத்தப்படுத்தப்படலாம் என ராமேசுவரம் மீனவ சங்க தலைவர்கள் எதிர் பார்க்கப்படுகின்றனர்.

தொடர்ந்து மீனவர்களை சிறைப்பிடிப்பதால் ராமேசுவரம் மீனவர்கள் பெறும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

ராமேசுவரம் மீன்துறை உதவி இயக்குனரிடம் கேட்டபோது.ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 2 படகு 15 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றதாக படகு உரிமையாளர்கள் தகவல் தெரிவித்தனர்.ஆனால் அரசு சார்பாக அதிகாரபூர்வமான  தகவல் ஏதும் இதுவரை வரவில்லை என தெரிவித்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: