பாக்.கில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் 8 பேர் பலி

Image Unavailable

 

கராச்சி, பிப்.18 - பாகிஸ்தானில் தண்டவாளத்தில் குண்டு வெடித்ததால் பயனிகள் ரயில் ஒன்று தடம் புரண்டது. இதில் 4 குழந்தைகள் உள்பட 8 பேர் பலியாயினர். பாகிஸ்தான் சினதுமாகாணத்தில் இருந்து பெஷாவர் நோக்கி குஷல் கான் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. உன்னர்வாக ரயில் நிலையத்தை ரயில் நேருங்கிக்கொண்டிருந்தது. அப்போது தல் என்ற இடத்தில் தண்டவாளத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் தண்டவாளங்கள் சிதறியதால் வேகமாக வந்துக் கொண்டிருந்தகுஷல்காவ் எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 பெட்டிகள் தடம் பிரணடு கவிழ்ந்தது.இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 8 பேர்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த உன்னர் வாகா நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இந்த தாக்குதலில் காயமடைந்த 12க்கும் மேறபட்டவர்களை  மீட்டு ரகிம்யார்கான் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தண்டவாளத்தில் நடத்திய சோதனையில் தீவிரவாதிகள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் குண்டுகளை வெடிக்க செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் கவாஜா சாத் ரபீக் உத்தரவிட்டுள்ளார். இதே பகுதியில் தபாஷி என்ற எக்ஸ்பிரஸ் ரயிலை குறி வைத்து சமீபத்தில் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ