முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை போட்டி - ஆஸ்திரேலியாவுக்கு எளிதான வெற்றி

வெள்ளிக்கிழமை, 25 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

 

நாக்பூர், பிப். 26 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாக்பூரில் நடந்த லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை சுருட்டி வீசியது. 

இந்தப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி தரப்பில், துவக்கவீரர்களான வாட்சன் மற்றும்ஹாடிந் இருவரும் அபாரமாகபேட்டிங் செய்து அரை சதம் அடித்து அணியை ரெற்ஹிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 

முன்னதாக பெளலிங்கின் போது, வேகப் பந்து வீச்சாளர்களான ஜான்சன் மற்றும் டெய்ட் இருவரும் நன்கு பந்து வீசி முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திநர். இதநால் நியூசி. அணியின் ரன் ரேட் குஹைந்தது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 8 -வது லீக் ஆட்டம் நாக்பூ ரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்தது. இதில் குரூப் ஏ பிரிவைச் சேர்ந்த ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. 

முன்னதாக இந்தப் போட்டியில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இஹுதியில் அந்த அணி 45.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 206 ரன்னை எடுத்தது. 

நியூசிலாந்து அணி சார்பில், ஒரு வீரர் ரை சதமும், 2 வீரர்கள் கால் சதமும் அடித்தனர். பின் வரிசை வீரரான எல். மெக்குல்லம் அதிகபட்சமாக 76 பந்தில் 52 ரன்னை எடுத்தார். இதில் 3 பவுண்டடரி அடக்கம். இறுதியில் அவர் ஜான்சன் பந்தில் ஆட்டம் இழந்தார். 

அடுத்தபடியாக கேப்டன வெட்டோரி 43 பந்தில் 44 ரன்னை எடுத்தா ர். இதில் 5 பவுண்டரி அடக்கம். தவிர, ரைடர் 31 பந்தில் 25 ரன்னையும், ஹெள 22 ரன்னையும், பி. மெக்குல்லம் 16 ரனனையும் எடுத்தனர். முன் வரிசை வீரர்களின் மோசமான பேட்டிங்கே அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. 

ஆஸ்திரேலிய அணி தரப்பில், வேகப் பந்து வீச்சாளர் ஜான்சன் 33 ரன்னைக்கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். ஷான் டெய்ட் 35 ரன்னைக் கொஓடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, பிரட்லீ ,வாட்சன் மற்றும் டி. ஸ்மத் ஆகியோர தலா  1 விக்கெட்டையும், எடுத்தனர். 

ஆஸ்திரேலிய அணி 207 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் எந்ற எளிய இலக்கை நியூசிலாந்து அணஇ ரைத்தது. டுத்து கலம் இறங்கிய அன்த அணி 34 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்னை எடுத்தது. 

இதனால் ஆஸ்திரேலிய அணி இந்தப் போட்டியில் 7 விக்கெட் வித்தி யாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. 

ஆஸ்திரேலிய அணி சார்பில் துவக்க வீரர்கள் இருவரும்நன்கு ஆடி அணிக்கு நல்ல அஸ்திவாரம் அமைத்துக்கொடுத்தனர். இருவரும் தலா அரை சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது. 

துவக்க ரீரர் வாட்சன் 61 பந்தில் 62 ரன்னை எடுத்தார். இதில் 6 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஹாடின் 50 பந்தில் 54 ரன்னை எடுத்தார். தவிர, எம். கிலார்க் 24 ரன்னையும், ஒயிட் 22 ரன்நையும், கேப்டன் பாண்டிங் 12 ரன்னையும் எடுத்தனர். 

நியூசிலாந்து அணி சார்பில், பென்னட் 63 ன்னைக் கொடுத்து 2 விக்கெ ட் எடுத்தார். செளதீ 45ரன்னைக்கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். இந்த ப்போட்டியின் ஆட்டநாயகனாக ஜான்சன் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்