புதுடெல்லி,மே.5 - டெல்லி ராம்லீலா மைதானத்தில் கதாநாயகன் ராம்தேவ். வில்லன் ஊழலாக இருந்தது. புதுடெல்லியில் ராம்தேவ் நேற்று ஊழலுக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். இதனால் டெல்லி நகரமே பரபரப்படைந்துள்ளது. நகர மக்கள் ஊழலுக்கு எதிராக போராட்டத்தை தொடங்கியுள்ள ராம்தேவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாது ஊழலை விளக்கவும் ஊழலால் மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை ராம்தேவ் ஆதரவாளர்கள் பல்வேறு வழிமுறைகளில் விளக்கியிருந்தனர். உண்ணாவிரதம் நடக்கும் இடத்தில் ராம்தேவ் ஆதரவாளர்கள் ஊழலுக்கு எதிரான வாசகங்களை எழுதியிருந்தனர். ஊழல் நடக்கும் மைதான வாயிலில் ஒரு வாலிபர் பத்து தலை ராவணன் மாதிரி வேடம் அணிந்திருந்தார். அந்த பத்து தலைகளும் ஆளும் கட்சியை சேர்ந்த தலைவர்கள் முகங்கள் மாதிரி இருந்தது. ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக ராவணன் வேடம் அணிந்து கோஷம் போட்டுக்கொண்டே இருந்தனர். வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற அர்த்தத்தில் இளைஞர்கள் டி.சர்ட்களை ஓவியங்களாக வரைந்திருந்தனர். 25 வயதுடைய சுமித்ரா என்ற இளம் பெண் கறுப்பு பணம் பதுக்கிவைத்திருப்பதை சுட்டுக்காட்டும் வகையில் ஒரு பெரிய கித்தான் துணையை வரைந்திருந்தார். இந்த வரைபடம் உண்ணாவிரதம் இருக்கும் இடத்தில் வைக்கப்பட உள்ளது.
- ஆழ்வார்திருநகரி பெருமாள் கருட வாகனம்.
- திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிசேகம்.
- மதுரை நன்மைதருவார் திருக்கல்யாணம்.
- திருப்போரூர் முருகப்பெருமான் பாரி வேட்டைக்கு எழுந்தருளல்.
- பெருவயல் முருகப்பெருமான் புஷ்பக விமானத்தில் புறப்பாடு.
- கோயம்புத்தூர் கோணியம்மன் கிளி வாகனத்தில் புறப்பாடு.
- காரமடை அரங்கநாதர் திருக்கல்யாணம்.
- திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள், குடந்தை ஆதிகும்பேசுவரர் இத்தலங்களில் ரதம்.