தமிழனத்தையே அழித்தவர் கருணாநிதி - பழ.கருப்பையா

சனிக்கிழமை, 26 பெப்ரவரி 2011      அரசியல்
palakarupaiah

 

விருதுநகர், பிப். 26 - தமிழனத்தையே அழித்த கருணாநிதியை அவரது தாய் அஞ்சுகத்தம்மாள் உயிரோடு இருந்தால் மன்னித்திருக்கவேமாட்டார் என விருதுநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழக கொள்கை பரப்பு துணை செயலாளர்  பழ.கருப்பையா காரசாரமாக பேசினார்.

விருதுநகரில் புரட்சித்தலைவியின் 63வது பிறந்தநாளை முன்னிட்டு தேசபந்து மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்திற்கு  அம்மா பேரவை கணேஷ்குரு தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் இளம்பெண் பாசறை டி.பி.எஸ்.வெங்கடேஷ், பூலி அகமது இப்ராகிம், நாகசுப்பிரமணியம், முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைதலைவர் ஐ.மருது, நகர பொருளாளர் முகம்மது நெய்னார்  வரவேற்புரையாற்றினர்.மாவட்ட செயலாளர் கே.கே.சிவசாமி, கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் பழ.கருப்பையா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

பழ.கருப்பையா சிறப்புரையாற்றுகையில் பேசியதாவது கருணாநிதியின் காலத்தில் வாழ்ந்த தலைவர்கள் யாரும் கலைஞரை வாழ்த்தியதில்லை. அந்தளவிற்கு மோசமானவர் கருணாநிதி. 

தற்போது கருணாநிதியின் ஆட்சியில் ஒரு கிலோ அரிசி விலை ரூ 1, 1 கிலோ தவிடு விலை ரூ 10, ஒரு ரூபாய் அரிசியை மாட்டிற்குத்தான் பயன்படுகிறது. அரிசி விலை ரூ 1, சிறுநீர் கழிக்க ரூ 3, 1 கிலோ உப்பு ரூ 12 அம்மா காலத்தில் அரிசி விற்ற விலை இன்று உப்பின் விலை உள்ளது. இன்று தமிழகத்தில் பாதிபேர் இறைச்சியிலிருந்து சைவத்திற்கு மாறிவிட்டனர். காரணம் இறைச்சியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.  கோழி சாப்பிட்டவர்கள் முட்டைக்குவந்துவிட்டார்கள். முட்டை சாப்பிட்டவர்கள் முட்டைகோஸ்க்கு வந்துவிட்டார்கள் இன்று முட்டைகோஷின் விலையும் உயர்ந்துள்ளது. இனி மக்களின் நிலை அதோகதிதான். 3 வேளை சாப்பிட்டவர்கள் தற்போது 2 வேளைதான் சாப்பிடுகிறார். கருணாநிதி எம்.ஜி.ஆர். திட்டத்தை விரிவுபடுத்துகிறார் தவிர புதிய திட்டம் ஒன்றும் இல்லை. தமிழத்தில் வருவாய் கூட வில்லை. விலைவாசி உயர்கிறது. ஜெயலலிதா ஆட்சியில் தங்கம் விலை ரூ 4100, தற்போது கருணாநிதி ஆட்சியில் தங்கம் விலை ரூ 15 ஆயிரம், ஏழைக்கு 1/2 பவுன் தங்கம்தான் உரிமை இன்று 1/2 பவுன் தங்கத்தின் விலை ரூ 8 ஆயிரம் அதுவும் இன்று இல்லை. தமிழகத்திற்கு 1லட்சத்து 10 ஆயிரம் கடன் உள்ளது. ஒவ்வொரு தமிழனுக்கு ரூ 25 ஆயிரம் கடன் உள்ளது.  புரட்சித்தலைவின் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி 11.89 சதவீதம், கருணாநிதியின் ஆட்சியில் தற்போது 4.41 சதவீதம் ஆகும். தமிழினம் அழிந்து கொண்டிருக்கிறது. ஆனால் கருணாநிதி கோவையில் இலக்கியங்களுக்கு மாநாடு நடத்துகிறார். உயிருக்கு மரியாதை இல்லை இலக்கியங்களுக்கு மரியாதை செய்கிறார். 

இலங்கையில் தமிழனம் அழிய காரணமாக இருந்தவர்கள் இரண்டுபேர் ஒருவர் இலங்கை எம்பி கருணா, இரண்டாவது தமிழகத்து கருணாநிதி இருவரும் தமிழினம் அழிய காரணமானவர்கள். தமிழனத்தை அழிக்க காரணமாக இருந்த கருணாநிதிக்கு வரலாற்றில் மன்னிப்பே கிடையாது. தமிழனத்தை அழித்ததை அவரது தாய் அஞ்சுகத்தம்மாள் இருந்திருந்தால் அவரை மன்னிக்கவே மாட்டார். 

கூட்டத்தில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் பி.பி.செல்வசுப்பிரமணியராஜா,  எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட துணை செயலாளர் கே.கலாநிதி, மாவட்ட கவுன்சிலர் மாரியப்பன், நகர இளைஞரணி செயலாளர் மகேந்திரன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் கண்ணன், அதியமான்,குமரவேல், கென்னடி,தர்மா உள்ளிட்ட கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: