முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா இன்று டெல்லி பயணம் பிரதமருடன் சந்திப்பு தமிழக நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனை

திங்கட்கிழமை, 13 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

சென்னை, ஜூன்.- 13 - தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக ஜெயலலிதா இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார். இன்றே பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசுகிறார். தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கிறார். அதன் பின்னர் நிருபர்களையும் சந்தித்து பேசுகிறார். கடந்த 16-ம் தேதி தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இருவரும் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர். டெல்லியில் நடக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்றமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு சோனியா அப்போது அழைப்பு விடுத்தார்.

முதல்வராக பதவியேற்ற சில நாட்களுக்குள் மரியாதை நிமித்தமாக பிரதமரை முதல்வர் சந்தித்திருக்க வேண்டும்.

ஆனால், தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தும் பணியில் ஜெயலலிதா தீவிரமாக ஈடுபட்டதால் அவரால் உடனடியாக டெல்லி பயணம் மேற்கொள்ள முடியவில்லை. இதனைத் தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் சட்டசபையில் நடந்ததால் அவரால் டெல்லி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

கடந்த 11-ம் தேதி சட்டசபைக் கூட்டத் தொடர் முடிவடைந்ததால் முதல்வர் ஜெயலலிதா, அரசு செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் இன்று பிற்பகல் தனி விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார். பட்ஜெட் கூட்டத் தொடர் இந்த மாத இறுதியில் தொடங்கி அடுத்த மாதம் வரை நடைபெறுகிறது.

பட்ஜெட் கூட்டத் டொருக்கு முன் நிலையை உறுதி செய்வதற்கும், தேவையான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்கும், ஆண்டு திட்ட நிதியை ஒதுக்கீடு செய்யவும் பிரதமர் மன்மோகன் சிங்கை நாளை (செவ்வாய்க்கிழமை) ஜெயலலிதா சந்தித்து பேசுகிறார். குடும்பத்துக்கு 20 கிலோ இலவச அரிசி திட்டம் அறிவித்திருப்பதால் கூடுதலாக அரிசியை பெறுவது, அதே போல் தமிழகத்தில் மின்வெட்டை சமாளிக்க மத்திய தொகுப்பிலிருந்து கூடுதல் மின்சாரம் பெறுவதற்கும் முதல்வர் ஜெயலலிதா, அப்போது  பிரதமருடன் பேச்சுவார்தைத நடத்துவார் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.

இந்த சந்திப்பின்போது பிரதமர் மன்மோகன்சிங்கிடம் தமிழகத்திற்கு தேவையான பல்வேறு கோரிக்கைகளுக்கு முதல்வர் ஜெயலலிதா நிதியுதவி கோருவார் என்று தெரிகிறது. இந்த பல்வேறு கோரிக்கைகளும் ஒரு புத்தமாக அச்சிடப்பட்டுள்ளது. இதனை பிரதமரிடம் ஜெயலலிதா சமர்ப்பித்து தமிழகத்திற்கு தேவையான நிதியுதவிகளை கோருவார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும், கவர்னர் உரையில் மாநில நிதி nullநீர் இணைப்புத்திட்டம் இடம் பெற்றுள்ளது. இந்த திட்டத்திற்கு பிரதமரிடம் ஜெயலலிதா கூடுதல் நிதி பெறுவதற்கான பேச்சுவார்த்தையும் நடத்துவார் என்று தெரிகிறது. இதே போல் இலங்கை தமிழர்கள் பிரச்சினை, தமிழக மீனவர்கள் விவகாரம் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் சில கோரிக்கைகளை பிரதமரிடம் ஜெயலலிதா எடுத்துரைப்பார் என்றும் தெரிகிறது.

இந்த பயணத்தின் போது முதல்வர் ஜெயலலிதா டெல்லியில் நிருபர்களையும் சந்தித்து பேசுகிறார்.  டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நிருபர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை மாலை முதல்வர் ஜெயலலிதா தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony