பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் கறுப்பு பணத்தை மீட்போம் - கட்காரி

சனிக்கிழமை, 26 பெப்ரவரி 2011      அரசியல்
Nitin

 

புதுச்சேரி, பிப்.27 - பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்போம் என்று பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். புதுச்சேரி சிங்காரவேலர் திடலில் நடைபெற்ற தாமரை யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் ஒன்றில் அகில இந்திய பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் நிதின் கட்காரி பேசுகையில், ஸ்பெக்ட்ரம் ஊழலை கண்டுபிடித்தது நானோ எதிர் கட்சிகளோ இல்லை. அரசின் பொது கணக்கு குழு தான் கண்டுபிடித்தது. காங்கிரஸ் ஆட்சியில் தான் ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ், காமன் வெல்த் என பல ஊழலாகள் தொடருகின்றன. இதுவரை நடைபெற்ற ஊழல் ரூ.5 லட்சம் கோடி. ஆனால் இந்தியாவின் பட்ஜெட்டடே ரூ10 லட்சம் கோடிதான். காங்கிரஸ் அரசு ஏழைகளைப்பற்றி கவலைப்படவில்லை. சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் இந்திய கறுப்பு பணம் ரூ.22 லட்சம் கோடி பதுக்கப்பட்டுள்ளது. பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தால் கறுப்பு பணத்தை மீட்டு கொண்டுவருவோம். நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவோம். 

பாரதீய ஜனதா சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என சிலர் கருதுகின்றனர். பாரதீய ஜனதா மைனாரிட்டிக்கு எதிரானது என்றால் எப்படி அப்துல் கலாமை ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழிந்திருக்கமுடியும். பாரதீய ஜனதா பயங்கரவாதிகளுக்கும் தேச விரோதிகளுக்கும் எதிரானதே தவிர மைனாரிட்டிகளுக்கு எதிரானது அல்ல. பாரதீய ஜனதாவில் சாதாரண தொண்டராக இருந்த எனக்கு தலைவராக வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸில் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி என அனைவருமே நேரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் தலைவராக வரமுடியும். மன்மோகன் சிங்,, சிதம்பரம், பிரணாப் முகர்ஜி போன்றவர்கள் தலைவராக வரமுடியுமா? தி.மு.க எந்பது கட்சியாக செயல்படாமல் தனியார் கம்பெநிபோல் செயல்படுகிறது. மீண்டும் பாரதீய ஜனதாவை ஆட்சியில் அமரவைக்க நீங்கள் தான் ஆதரவு தரவேண்டும் இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்திற்கு கட்சியின் புதுச்சேரி மாநில தலைவர் தாமோதர் தலைமை தாங்கினார். தேசிய செயலாளர் லட்சுமணன், அமைப்பு பொது செயலாளர் சதீஷ், மோகன்ராஜீலு, முன்னாள் மாநில தலைவர் விஸ்வேஸ்வரன், செயலாளர் சாமிநாதன், வர்த்தக அமி தலைவர் அருள் முருகன், மாநில் செயலாளர் துரைகணேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: