வருமானவரி: நெரிசலை தவிர்க்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை

சனிக்கிழமை, 18 ஜூன் 2011      வர்த்தகம்
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூன். 18 - வருமான வரி செலுத்துவோர் கடைசி தேதிக்கு முன்னதாகவே வந்து தங்களது வருமானவரியை செலுத்துமாறு இந்திய ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. 

நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ரிசர்வ் வங்கியின் மண்ட ல இயக்குனர் என்.எஸ். விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். வருமானவரி செலுத்துவதில் ஏற்படும் கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க இந்தி யன் ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் வருமானவரி செலுத்துவதில் ஏற்ப டும் அதிக நெரிசலை சமாளிக்க ரிசர்வ் வங்கி கூடுதலாக கவுண்டர்களை திறந்து வைத்துள்ளது. 

இருப்பினும் பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வே ண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர்க்க இந்திய ரிசர்வ் வங் கி மட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் உள்ள தெரிவு செய்யப்பட்ட தேசி ய பொதுத் துறை, தனியார் வங்கிகளிலும் வருமானவரி செலுத்துவத ற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பாரத ஸ்டேட் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பா ங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா, அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, பாங்க் ஆப் பரோடா , பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் மகாராஷ்டிரா ஆகிய வங்கிகளில் வருமானவரி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், கனரா வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, கார்ப்பரேச ன் வங்கி, தேனா வங்கி, இந்தியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் பாங்க், சிண்டிகேட் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, யுனைட்டெட் பா ங்க் ஆப் இந்தியா, யூகோ பாங்க், விஜயா பாங்க், ஆக்சிஸ் வங்கி, ஐ. சி.ஐ.சி.ஐ. வங்கி, ஐ.டி.பி.ஐ. வங்கி, எச்.டி.எப்.சி. பேங்க் ஆகிய வங் கிகளிலும் செலுத்தலாம். 

இவ்வங்கிகளில் வருமானவரியை பணமாகவோ, காசோலையாக வோ செலுத்தலாம். இவ்வசதியை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு இந்தியன் ரிசர்வ் வங்கியின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: