முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சர் மு.க. அழகிரி எங்கே? தேடும் திமுகவினர்

திங்கட்கிழமை, 27 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி,ஜூன்.- 28 - தேர்தல் முடிவுக்கு பின்பு அ.தி.மு.க கட்சி என்று ஒன்று இருக்காது என்று கூறிய மத்திய அமைச்சர் அழகிரி தேர்தல் முடிவு வந்த பிறகு வாய்த்திறக்காமல் ஓடி ஒழிந்துகொண்டிருப்பது ஏன்? தற்போது திமுகவில் இருக்க கூடிய மிகப்பெரிய தலைகள் அனைத்தும் விடிந்ததும் தனக்கு என்ன நிகழ போகிறது என்று பயத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.  ஏற்கனவே அழகிரியின் இடது கை வலது கையாக விளங்கிய மதுரை மேயர் தேன்மொழி, துணை மேயர் மன்னன் ஆகியோர் முன்ஜாமின் பெற்று சுற்றித் திரிந்து வருகின்றனர்.  அந்த வகையில் தற்போது அழகிரியும் முன்ஜாமீன் பெற முட்டி மோதி வருகிறார். கடந்த திமுக ஆட்சியில் மதுரையே நான் என்று கூறிய அழகிரி நான் சொன்னால் எதுவும் நடக்கும் என்று அகம்பாவத்துடன் ஆட்டம் போட்டு வந்த அழகிரி நடந்து முடிந்த தேர்தலில்  மதுரை மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெற்றவுடன் அழகிரியின் கோட்டை என்று வர்ணிக்கப்பட்ட மதுரை சுக்கு நூறாக நொறுங்கியவுடன் ஓட்டம்பிடிதார் அழகிரி.

கடந்த திமுக ஆட்சியில் நடந்த திருமங்கலம் இடைத்தேர்தலில் வாக்காளக்கள் அனைவரையும் பணம் கொடுத்து விலைபேசி வெற்றி பெற்றதை போல் இந்த சட்டமன்ற தேர்தலிலும் வாக்காளர்கள் அனைவரையும் விலை பேசி வாங்கி வெற்றிபெற்று விடலாம் என்ற கனவு கண்டு வந்த திமுகவினர். திருமங்கலம் இடைத்தேர்தலில் பின் பற்றி வந்த அதே பார்முலாவே இந்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுவினர் வாக்காளர்களிடையே பணத்தாசை காட்டி வாக்கு கேட்டனர். ஆனால் ஜனநாயக மக்கள் பணநாயகத்திற்கு ஆசை படாம்ல் ஜனநாயகத்தை நிலைநாட்டி அதிமுக கூட்டணியை அமோக வெற்றி பெற செய்தனர். கடந்த திமுக ஆட்சியின் போது திமுகவினர் செய்த அராஜகத்தை மதுரை மக்கள் மறக்கவில்லை. அழகிரியின் செல்வாக்கு திமுகவில் இரண்டாமிடத்தில் இருப்பதாக செய்தி வெளியிட்ட அவர்களின் கட்சி சார்ந்த பத்திரிக்கையே தீயிட்டு கொழுத்தி நாசப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அங்கு வேலை பார்த்த 3 அப்பாவி இளைஞர்களையும் தீயிக்கு பலியாக்கி விட்டனர். அழகிரியின் அடியாட்கள். அந்த நேரத்தில் மதுரை மேயர் தேன்மொழி கையில் கட்டான் தடியோடு ஆர்ப்பாட்டம் செய்த காட்சி அனைத்து பத்திரிக்கைகளிலும் வெளிவந்தது. அப்போது திமுக ஆட்சியில் இருந்ததால் கொலை செய்யப்பட்ட 3 பத்திரிக்கையாளர் குடும்பங்களுக்கும் நஷ்ட ஈடு மட்டும் வழங்கி விட்டு கொலையாளிகளை காப்பாற்றி விட்டார் கருணாநிதி. இந்த பத்திரிக்கை அலுவலகம் எரிக்கப்பட்ட சம்பவத்திலும் 3 பேர் பலியான சம்பவத்திலும் தொடர்புடைய அனைவரையும் தற்போது ஆட்சியில் கைது செய்ய வேண்டுமென்று பொது மக்களும் பத்திரிக்கையாளர்களும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதன்படி தாங்கள் கைது செய்யப்படலாம் என்ற முன்னெச்செரிக்கையுடன் மதுரை மேயர் தேன்மொழியும், துணை மேயர் மன்னனும் முன்ஜாமீன் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று மதுரையில் உள்ள அழகிரியின் கைக்கூலிகள் அனைவரும் தாங்களும் கைது செய்யப்படலாம் என்ற பயத்துடன் முன்ஜாமீனுக்காக கோர்ட் வாசலில் காத்து கிடக்கின்றனர். தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த தா.கிருட்டிணன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான அழகிரியை அப்போதைய திமுக ஆட்சி கொலைக் குற்றத்திலிருந்து காப்பாற்றி எம்.பி ஆக்கி தற்போது மத்திய அமைச்சராகவும் ஆக்கி விட்டது. இந்த கொலை வழக்கை தற்போது மீண்டும் விசாரித்து உண்மையான குற்றவாளியான அழகிரியை கைது செய்யவேண்டும் என்று திமுக வினர் அரசுக்கு மறைமுக கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கொலை வழக்கு தூசி தட்டப்பட்டால் எந்த நேரத்திலும் அழகிரி கைது செய்யப்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அழகிரி எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் திமுகவினர் தேடி வருகின்றனர். மத்திய அமைச்சரவை கூட்டத்திலும் கலந்துகொள்ளாமல் மறைந்து வருகின்றார். இதனால் இவரது இலாக்காவான உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்து விலை நிர்ணயிக்க முடியாமல் போய் வருவதாக அறிக்கைகள் வெளி வந்துகொண்டிருக்கின்றன.

ஒருபுறம் அழகிரியை தேடும் முயற்சியில் திமுகவினர் அலைந்தாலும் மறுபுறம் திமுகவின் முக்கியபுள்ளிகள் டெல்லியே நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றம் சாட்டப்பெற்று ஏற்கனவே கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, எம்.பி.கனிமொழி, கலைஞர் டி.வி இயக்குநர் சரத்குமார் மற்றும் பலர் வரிசையில் தற்போது இடம்பிடித்துள்ள மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை தொடர்ந்து யார்யார் இடம்பெறுவார்கள் என்ற நோக்கத்தோடு டெல்லிக்கு திமுக முக்கிய தலைகள் படையெடுத்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்