முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடத்த இருந்த ரேஷன் அரிசி பறிமுதல்

புதன்கிழமை, 13 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.13 - சென்னையில் புகாரின் அடிப்படையில் கிடைத்த தகவலின்படி கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்திற்கு நேரில் சென்ற உணவுத்துறை அமைச்சர் புத்திசந்திரன் அங்கு கடத்த இருந்த ரேசன் அரிசியை பறிமுதல் செய்தார். தமிழக முதல்வர் உத்தரவின் பேரில்  உணவுத்துறை அமைச்சர் புத்தி சந்திரன் சென்னை கொருக்குப் பேட்டை இரயில் நிலையத்தில் வெளி மாநிலத்திற்கு கடத்த இருந்த 6 மூட்டை (சுமார் 160 கிலோ) ரேசன் அரிசியை பறிமுதல் செய்தார். முன்னதாக அமைச்சர் கொருக்குப் பேட்டை கிழக்கு முத்தையா தெருவில் உள்ள வடசென்னை கூட்டுறவு பண்டகசாலை ரேசன் கடையினை ஆய்வு செய்தார். இவ்வாய்வின் போது ரேசன் கடையில் வழங்கப்படும் இலவச அரிசியின் தரம், எடையின் அளவு ஆகியவை சரியாக உள்ளதா என பொது மக்களிடம் கேட்டறிந்தார். மேலும் ரேசனில் வழங்கப்படும் துவரம்பருப்பு, பாமாயில் போன்ற இதர பொருட்களின் தரத்தினையும் ஆய்வு செய்தார்.  இந்த ரேசன் கடையில் போலி ரேசன் அட்டை ஒன்றினை பறிமுதல் செய்தார்.  பின்னர் சென்னை, தங்கசாலை தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக கிடங்கிற்கு சென்று  அங்கு லாரிமூலம் இறங்கிக் கொண்டிருந்த துவரம்பருப்பு மற்றும் அரிசி ஆகியவற்றின் தரத்தினை அமைச்சர் அவர்கள்  ஆய்வு செய்தார். மேலும் அங்கு இருப்பில் வைக்கப்பட்டிருந்த அரிசி,  துவரம்பருப்பு  ஆகியவைகளின் இருப்பு பதிவேடு, வழங்கல் பதிவேடு, பணியாளர்களின் வருகை பதிவேடு ஆகியவற்றினை ஆய்வு செய்தார்.

ரேசன் அரிசி இரயில் மூலம் வெளி மாநிலத்திற்கு கடத்துவதாக புகார்கள் வந்ததையொட்டி உணவுத்துறை அமைச்சர் இந்த ஆய்வினை மேற்கொண்டு நேரடியாக இரயில் நிலையத்திற்கு சென்று கடத்த இருந்த ரேசன் அரிசியை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாய்வின் போது திரு. கா. பாலசந்திரன், ஆணையர், குடிமை பொருள் வழங்கல் துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்