முக்கிய செய்திகள்

சன் டி.வி. மீது நடிகை ரஞ்சிதா பரபரப்பு புகார்

புதன்கிழமை, 13 ஜூலை 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூலை, 13 - நித்தியானந்தா- ரஞ்சிதா படுக்கையறை காட்சிகளை ஒளிபரப்பியதாகவும், மிரட்டல் தொடுத்ததாகவும் சன் டி.வி. மற்றும் தின, வார இதழ் மீது நடிகை ரஞ்சிதா சென்னை போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார். 

இதுபற்றிய விபரம் வருமாறு:- கடந்த ஆண்டு சன் நெட்வொர்க் தொலைக்காட்சியில் சாமி நித்தியானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறையில் ஒன்றாக இருப்பது போன்ற காட்சிகள் திரும்ப திரும்ப ஒளிபரப்பப்பட்டது. கிட்டதட்ட ஆபாசப் படம் போல் ஒளிபரப்பிய நித்தியானந்தா- ரஞ்சிதா படுக்கையறை காட்சிகள் திரும்ப திரும்ப சன் தொலைக்காட்சி மற்றும் அதன் உப தொலைக்காட்சிகளில் மீண்டும் மீண்டும் காட்டப்பபட்டது. 

இதனால் வீட்டில் குடும்பத்துடன் தொலைக்காட்சியை கண்டு களித்தவர்கள் குழந்தைகள்,  வயதுக்கு வந்த பிள்ளைகளை வீட்டில் வைத்துக் கொண்டு டெலிவிஷன் நிகழ்ச்சிகளை பார்த்தவர்கள் திடீரென ஒளிபரப்பப்பட்ட ஆபாச காட்சியால் அவமானத்தால் உடல் குன்றி போய் சங்கடப்பட்டு நெளிந்தனர்.  ஊடகம் தனது கையில் உள்ளது என்பதற்காக நேயர்களின் வீடுகளை ஆபாசப் படம் பார்க்கும் இடமாக மாற்றியதை தமிழ் மக்கள் யாரும் ரசிக்கவில்லை. உலகெங்கும் இந்த காட்சி ஒளிபரப்பப்பட்டது. 

ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெடித்து கிளம்பிய நேரத்தில் உலகில் இதை விட வேறு பெரிய விஷயம் இல்லை என்பது போல் அத்தகைய படக்காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. மேலும் நித்தியானந்தா- ரஞ்சிதா படுக்கையறை காட்சிகளை நக்கீரன் வாரம் இருமுறை தனது இதழில் அட்டை படமாக வெளியிட்டது. இந்த சம்பவத்தையொட்டி நித்தியானந்தாவை போலீஸ் கைது செய்தது.  ரஞ்சிதா எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் மறைந்து வாழ்ந்தார். 

இதனிடையே இந்த விவகாரத்தில் தவறாக படுக்கையறை காட்சிகளை ஒளிபரப்பியதாக சன் டி.வி.நிர்வாகம் மீது 2 வாரத்திற்கு முன்பு நித்தியானந்தா ஞானபீட நிர்வாகிகள் கமிஷனரிடம் புகார் அளித்தனர். இந்த நிலையில் வெளியுலகத்தில் தலை காட்டாமல் இருந்த நடிகை ரஞ்சிதா சன் டி.வி. மற்றும் செய்தி வெளியிட்டவர்கள் மீது நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் ஒன்றை அளித்தார். நேற்று மதியம் 3 மணி அளவில் தனது வழக்கறிஞர்களுடன் சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து ரஞ்சிதா புகார் அளித்தார். 

பின்பு செய்தியாளர்களை சந்தித்த நடிகை ரஞ்சிதா, என் மீது தவறான செய்தியை வெளியிட்ட சன் டி.வி. நெட்வொர்க், நக்கீரன், தினகரன் இதழ்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனரிடம் புகார் அளித்ததாக கூறினார். இதுபற்றி கருத்து தெரிவித்த போலீஸ் அதிகாரி ஒருவர், விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பெண்ணின் புகைப்படத்தையே வெளியிடக் கூடாது என்பது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு. ஆனால் இவர்கள் நடிகை ரஞ்சிதாவை பல கோணங்களில் வெளியிட்டு செய்தியும் போட்டனர். இது ஒரு தனி நபரின் சுதந்திரத்தில் அத்துமீறி நுழையும் செயல். மேலும், ஒளிபரப்பை நிறுத்த பணம் வேறு கேட்டு மிரட்டல் விடுத்துள்ளதாகவும் ரஞ்சிதா புகார் அளித்துள்ளார். ஆகவே இந்த  வழக்கு மிக முக்கியமான வழக்காக மாறும் என்று கருத்து கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: