முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் ஆவணி மாத பூஜைகள் துவக்கம்

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

சபரிமலை, ஆக.19 - சபரிமலை அருள்மிகு ஐயப்பன் திருக்கோயிலில் ஆவணி மாத பூஜைகள் தொடங்கின. முன்னதாக கடந்த செவ்வாய்க் கிழமை கோயில் நடை திறக்கப்பட்டது. மறுநாள் காலையில் மேல்சாந்தி சசி நம்பூதிரி சன்னிதான நடையை திறந்து நெய் விளக்கேற்றி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். 

புதிய தந்திரி கண்டரரு மகேஸ்வரு சோபன மண்டபத்தில் மகா கணபதி ஹோமத்தை நடத்தினார். பின்னர் ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் தொடங்கி நடைபெற்றது. தொடர்ந்து உஷ பூஜை, உதயஸ்தமன பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன. வரும் 21 ம் தேதி சபரிமலை ஐயப்பன் திருக்கோயில் நடை திறந்திருக்கும். புதன்கிழமை மகாசங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பம்பை கணபதிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!