முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல் புகாரில் சிக்கிய உ.பி. மந்திரி நீக்கம்

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

 

லக்னோ,ஆக.19 - உத்தர பிரதேசத்தில் மாயாவதி மந்திரி சபையில் கால்நடை துறை மந்திரியாக இருந்தவர் அவத்பால்சிங். இவர் மீது ஊழல் புகார் கூறப்பட்டது. இது பற்றி லோக்அயுக்தா விசாரணை நடத்தியதில் மந்திரி மீதான புகாருக்கு ஆதாரம் இருப்பதாக விசாரணை நீதிபதி மக்ரோட்ரா குற்றம் சாட்டினார். அவரை டிஸ்மிஸ் செய்யவும் சிபாரிசு செய்தார். 

அதன்படி மந்திரியை ராஜினாமா செய்யுமாறு முதல்வர் மாயாவதி உத்தரவிட்டார். இதையடுத்து அவத்பால்சிங் ராஜினாமா செய்து மாயாவதியை சந்தித்து கடிதம் கொடுத்தார். அதை அவர் ஏற்றுக் கொண்டு கவர்னருக்கு அனுப்பி வைத்தார். அவத்பால்சிங் 4 முறை எம்.எல்.ஏவாகவும், 2 முறை மந்திரியாகவும் இருந்துள்ளார். அவர் மீது சமாஜ்வாடி கட்சி நிர்வாகிகள் ஊழல் புகார் தெரிவித்தனர்.

ராஜினாமா செய்தது பற்றி கருத்து தெரிவித்த அவர், என் மீது கூறப்பட்ட புகாரையடுத்து தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்துள்ளேன். லோக்அயுக்தா அறிக்கையை இன்னும் முழுமையாக படிக்கவில்லை. அதன்பிறகு விரிவாக பதில் அளிக்கிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்