முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நில அபகரிப்பு வழக்கில் திமுக கவுன்சிலர் கைது

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஆக.19 - நில அபகரிப்பு வழக்கில் மதுரை திமுக கவுன்சிலர் மலைச்சாமி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் 13 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.  அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நில அபகரிப்பு, ரவுடியிசம், மோசடி, கொலை முயற்சி, கொலை செய்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்களில் சிக்கியவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் குறிப்பாக நில மோசடி தொடர்பாக தமிழகம் முழுவதும் ஏராளமானோர் புகார் கொடுத்து வருகிறார்கள். இதில் திமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், தற்போதைய எம்எல்ஏக்கள் என திமுகவினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் அதிக புகார்கள் கூறப்பட்ட மதுரையை சேர்ந்த பொட்டுசுரேஷ், அட்டாக் பாண்டி, ஒச்சுபாலு ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இதன் தொடர்ச்சியாக மதுரை 52 வது வார்டு திமுக கவுன்சிலர் மலைச்சாமி நில அபகரிப்பு வழக்கில் சிக்கி கைதாகி உள்ளார்.

   மதுரை ஜெய்கிந்துபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவருக்கு சொந்தமான இடத்தை மதுரை 52வது வார்டு திமுக செயலாளரும், கவன்சிலருமான மலைச்சாமி உள்பட 15 பேர் சேர்ந்து முருகனை மிரட்டி அவரது நிலத்தை அபகரித்ததாக மதுரை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி திமுக கவுன்சிலர் மலைச்சாமி உள்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதை தொடர்ந்து நேற்று மாலை கவன்சிலர் மலைச்சாமி, அவரது நண்பர் சாமிநாதன் ஆகியோரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 13 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago