முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக்தாவூத் வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.28 - ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேருக்கு உயிர்பிச்சை வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனைத்து தமிழக முஸ்லிம்  மக்கள் சார்பாக தமிழ்மாநில முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் எஸ்.ஷேக் தாவூத் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுயிருக்கும், முருகன், சாத்தன், பேரிவாளன் ஆகிய மூன்று பேருக்கும், கருணை மனு நிராகரிக்கப்பட்டு, வரும் 9-ம் தேதி தூக்கு தண்டனை என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுயிருக்கிறது.

இது மிகுந்த மனவேதனையும், மன உளச்சலையும், தரக்கூடியதாக இருக்கிறது. தமிழகத்திலுள்ள தமிழர்கள் மட்டுமல்லாது, உலக முழுவதுமுள்ள தமிழர்கள் அனைவரும் கவலையோடு எதிர்நோக்குகின்ற நிகழ்வாக உள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில், குற்றம் சுமத்தப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். ஒரே குற்றத்திற்கு எத்தனை முறை தண்டனை அளிப்பது, 2 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இராஜ  பக்சேயின் கொடூர ஆட்சியில் அப்பாவி தமிழர்கள், இளைஞர்கள், இளம் பெண்கள் கற்பழிக்கப்பட்டும், மனிதாபிமான மற்ற முறையில், குண்டுகளை வீசியும், சுட்டும், கொல்லப்பட்டுயிருக்கிறார்கள்.

இப்படி தமிழனம், பல லட்சம் உயிர்களை இழந்திருக்கிறது, இதை எல்லாம் தாண்டி இன்று குறிப்பாக தமிழகத்திலே, மேலும் 3 பேருக்கு தூக்கு தண்டனை என்பதை தமிழ் மக்களாகிய, நாம் வேடிக்கைப்பார்த்து கொண்டியிருக்க முடியாது. உலகமெங்குமுள்ள மனிதாபிமானிகள் தூக்கு தண்டனையே கூடாது என்று சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்கிறார்கள்.

இப்படியொரு காலகட்டத்தில் மறப்போம், மன்னிப்போம் என்ற அடிப்படையில், முன்னாள் பாரத பிரதமர்  ராஜீவ் காந்தி குடும்ப உறுப்பினர்களே மன்னித்துவிட்ட நிலையில், கொலைக்கு கொலை, பரிகாரமாகாது, என்ற அடிப்படையிலும் முருகன், சாத்தன், பேரரிவாளன், 3 பேருக்கும் உயிர்ப்பிச்சை வழங்க  தமிழக முதல்வர் ஜெயலலிதா தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழகத்திலுள்ள அனைத்து இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்த தமிழக மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம். இவ்வாறு ஷேக் தாவூத் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்