முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

27ம் தேதி தமிழ்நாட்டில் அத்வானி ரத யாத்திரை

வெள்ளிக்கிழமை, 7 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, அக்.7 - நாடு முழுவதும் ரதயாத்திரை செல்ல பா.ஜ.க. மூத்த தலைவரான எல்.கே. அத்வானி திட்டமிட்டுள்ளார். ஊழலை எதிர்த்தும், அரசியலில் தூய்மையை கடைபிடிக்க வலியுறுத்தியும் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானி திட்டமிட்டுள்ளார். வருகிற 11ம் தேதி பீகாரில் சோசலிஸ்டு தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண் பிறந்த ஊரான சித்தா பியாரா கிராமத்திலிருந்து ரத யாத்திரை புறப்படுகிறார். இந்த யாத்திரையை பீகார் முதமைச்சர் நிதிஷ்குமார் கொடியசைத்து துவக்கி வைக்கிறார். பா.ஜ.க. தலைவர் நிதின்கட்காரி மற்றும் தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்புப் பேருந்தல் அத்வானி, நாடுமுழுவதும் 23 மாநிலங்கள் வழியாக 38 நாட்கள் ரதயாத்திரை சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது ஆங்காங்கே நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொண்டு ஊழலை எதிர்த்துப் பிரசாரம் செய்கிறார். 3 கட்டங்களாக மேற்கொள்ளும் பயணம் முதல்கட்டமாக 26ம் தேதி புவனேஸ்வரத்தில் நிறைவு பெறுகிறது. 2 வது கட்டமாக 27ம் தேதி மதுரையில் ரத யாத்திரை தொடங்குகிறார். இதற்காக அன்று காலை டெல்லியிலிருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார். அங்கு நடைபெறும் கூட்டத்தில் பேசுகிறார். பின்பு விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி வழியாக 28ம் தேதி கேரளா சென்று அங்கு பேசுகிறார். அதன்பிறகு கர்நாடகம், மராட்டியத்தில் ரதயாத்திரை செல்கிறார். நவம்பர் 20 ம் தேதி ரதயாத்திரை நிறைவுபெறுகிறது. இதனையொட்டி அங்கு பிரமாண்டமான வகையில் நடைபெறும் ஊழல் எதிர்ப்பு பேரணியில் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். அத்வானியின் தமிழக ரத யாத்திரைக்கு மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், சரவணபெருமாள், மோகன் ராஜூலு செய்துவருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago