Idhayam Matrimony

நடுவானில் கட்டுப்பாட்டை இழந்த ஏர் இந்தியா விமானம்

செவ்வாய்க்கிழமை, 1 ஜூலை 2025      இந்தியா
Air-India

Source: provided

புதுடில்லி : அகமதாபாத் விமான விபத்தில் 270 பேர் உயிரிழந்த அடுத்த ஓரிரு நாட்களில் டில்லியில் இருந்து வியன்னா சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து 900 அடி உயரத்துக்கு கீழே இறங்கியதாக, தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக வெளியான தகவலில், இருப்பினும் அதனை சமாளித்து அந்த விமானத்தை விமானிகள் பத்திரமாக ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் தரையிறக்கினர். இது குறித்து தகவல் அறிந்த இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் விசாரணையை துவக்கி உள்ளது. ஏர் இந்தியாவின் பாதுகாப்பு பிரிவு தலைவருக்கு சம்மன் அனுப்பியதுடன், விசாரணை முடியும் வரை அந்த இரண்டு விமானிகளையும் பணியில் இருந்து விடுவிக்கவும் உத்தரவிட்டு உள்ளது.

கடந்த ஜூன் 14ம் தேதியன்று, தலைநகர் டில்லியில் இருந்து ஆஸ்திரியாவின் வியன்னா நகருக்கு ஏர் இந்தியா விமானம் கிளம்பியது. விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், எச்சரிக்கையை அனுப்பியது. அப்போது மோசமான வானிலை இருந்தாலும், நிலைமையை சமாளித்து சாதூர்யமாக செயல்பட்ட விமானிகள், விமானத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து பயணத்தை தொடர்ந்ததுடன் 9 மணி நேரம் 8 நிமிடங்கள் பயணித்து வியன்னாவில் தரையிறக்கினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து