முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் அ.தி.மு.க. வெற்றி உறுதி: அமைச்சர் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 18 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,அக்.18 - மதுரை மாநகராட்சியில் மேயர் - வார்டு அ.தி.மு.க. வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறுவார்கள் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார். அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று காலை 9.30 மணிக்கு மதுரை மீனாட்சி கல்லூரியில் அமைந்துள்ள வாக்குசாவடியில் தாயார் ஒச்சம்மாள், மனைவி ஜெயந்தி ஆகியோருடன் வந்து ஓட்டு போட்டார். ஒட்டுபோட்டு விட்டு வெளியே வந்த அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில்,  கடந்த சட்டசபை தேர்தலில் அம்மா முதல்வராக வரவேண்டும் என்று மக்கள் வாக்கு அளித்தனர்.  5 மாத அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு உள்ளது. சிறப்பான நிர்வாகம் நடைபெற்று வருகிறது. 

அம்மா அறிவித்துள்ள நலத்திட்டம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. ஏழை, எளிய நடுத்தர மக்கள் அம்மா நிரந்திரமாக முதல்வராக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற்றால்தான் திட்டங்கள் செயல்படுத்த முடியும் என்று மக்கள் விரும்புகிறார்கள். எனவே மக்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க முடிவு செய்து விட்டனர். 

எனவே மேயர் பதவிக்கு போட்டியிடும் ராஜன்செல்லப்பா 1 1/2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அனைத்து மாமன்றத்திலும் போட்டியிடும் வேட்பாளர்கள் அமோக வெற்றிபெறுவார்கள். 100 சதவீதம் அ.தி.மு.க.வுக்கு வெற்றி கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!