முக்கிய செய்திகள்

இந்தியசிறைகளில் வாடும்ஏராளமான பாகிஸ்தானியர்கள் சுப்ரீம் கோர்ட் அதிர்ச்சி

சனிக்கிழமை, 12 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, நவ. - 12 - எந்தவொரு விசாரணையும் இல்லாமல் இந்தியாவின் பல்வேறு சிறைச்சாலைகளில் ஏராளமான பாகிஸ்தானியர்கள் வாடி வருவது பற்றி கேள்விப்பட்ட சுப்ரீம் கோர்ட் அது குறித்து தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளது.  இது குறித்து ஒரு விரிவான அறிக்கையை 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நேற்று உத்தரவிட்டது. இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாநில தேசிய விடுதலை  றுத்தைகள் கட்சித் தலைவர் பீம்சிங் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 300 பாகிஸ்தானியர்களை விடுவிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று பீம்சிங் கோரியிருந்தார். இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ஆர்.எம். லோத்தா தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போதுதான் நீதிபதி அதிர்ச்சியடைந்தார்.  தாமதமே இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 4 பெண்கள் உட்பட பாகிஸ்தானியர்களை ஏன் அவர்களுடைய நாட்டுக்கு திருப்பி அனுப்பக் கூடாது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். சில விஷயங்களை நீங்கள் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஜவ்வாக இழுக்கக் கூடாது. எனவே நீங்கள் இது தொடர்பாக ஒட்டுமொத்த நிலவரத்தையும் தாருங்கள். அப்போதுதான் நாங்கள் உத்தரவு பிறப்பிக்க முடியும். முழுமையான தகவல் எங்களுக்கு வரவில்லை. எனவே ஒரு விரிவான அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய வேண்டும். இந்திய சிறைகளில் வாடும் வெளிநாட்டு கைதிகள் பற்றிய முழுமையான விவரம் அளிக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசை நீதிபதி வலியுறுத்தினார்.  முன்னதாக இந்த வழக்கை தாக்கல் செய்த பீம்சிங், விசாரணையே இல்லாமல் பல ஆண்டுகளாக வெளிநாட்டவர்கள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இது சட்டத்துக்கு விரோதமானது என்று வாதிட்டார். இதைக் கேட்ட நீதிமன்றம் அதிர்ச்சியடைந்தது. 2 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டது.  

இதை ஷேர் செய்திடுங்கள்: