முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாவ்லாவை சேர்த்தது சரியான முடிவு தான் - தோனி பேட்டி

வெள்ளிக்கிழமை, 11 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச். 11 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்திற்கு எதிராக நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெ ற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா கால் இறுதிக்கு தகுதி பெற்றது. இந்திய அணி ஏற்கனவே வங்காளதேசம், அயர்லாந்து போன்ற பலவீ னமான அணிகளை வென்று இருந்தது. இங்கிலாந்திற்கு எதிரான ஆட்டத்தை டை செய்தது. 

பலவீனமான நெதர்லாந்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா கொஞ் சம் தடுமாறியே வெற்றி பெற்றது. 190 ரன் இலக்கை எடுக்க 5 விக்கெ ட்டை இந்திய அணி இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய நெதர்லாந்து அணி 46.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 189 ரன்னில் சுருண்டது. இதில் கேப்டன் பீட்டர் போரென் அதிகபட்சமாக 38 ரன் எடுத்தார். 

ஜாஹிர்கான் 3 விக்கெட்டையும், யுவராஜ் சிங் 2 விக்கெட்டையும்

கைப்பற்றினர். நெருக்கடி பெளலர் சாவ்லா 2 விக்கெட் எடுத்தார். முதன்மை சுழற் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் ஒரு விக்கெட்டை கூட எடுக்க முடியவில்லை. 

பின்னர் ஆடிய இந்தியா 38.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன் எடுத்தது. 81 பந்துகள் எஞ்சிய நிலையில் இந்த வெற்றி கிடைத்தது. யுவராஜ் சிங் 73 பந்தில் 51 ரன்னும் (அவுட் இல்லை) சேவாக் 39 ரன் னும் எடுத்தனர். 

யுவராஜ் சிங் தொடர்ந்து 3 -வது அரை சதம் அடித்தார். இங்கிலாந்து க்கு எதிராக 58 ரன்னும், அயர்லாந்துக்கு எதிராக 50 ரன்னும் எடுத்து இருந்தார். இந்த ஆட்டத்திலும் அவர் ஆட்டநாயகனாக தேர்வு பெற் றார். 

இந்த வெற்றி குறித்து இந்திய அணிக் கேப்டன் தோனி கூறியதாவது - இந்த வெற்றி மிகவும் முக்கியமானது. இது ஒரு மோசமான வெற்றி இல்லை. அதே நேரத்தில் சிறந்த வெற்றி என்று கருத முடியாது. 

மிடில் ஓவரில் எங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஒட்டு மொத்தத்தில் சிறந்த அனுபவம் ஏற்பட்டது. நாக் அவுட் சுற்று முக்கியமானது. ஒவ் வொரு துறையிலும் முன்னேற்றம் அடைந்து செல்வது முக்கியமானது. 

யூசுப் பதான் ஒரு அதிரடி பேட்ஸ்மேன். அவர் நீண்ட நேரம் களத்தில் நின்று ஆட வேண்டும் என்று நினைத்து முன்னதாக களம் இறக்கி னோம். ஆனால் ஆடுகளம் சுழற் பந்து வீச்சிற்கு ஏற்ற வகையில் இருந்தது. என்றாலும் அவரது ஆட்டம் மகிழ்ச்சி அளிக்கிறது. 

யுவராஜ் சிங் மீது எப்போதும் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. அவரா ல் ரன்களை குவிக்க முடியும். விக்கெட்டு கைப்பற்ற இயலும். எங்கள து பந்து வீச்சாளர்கள் அனைவரும் மனவலிமையுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். 

பையூஸ் சாவ்லா மிகுந்த நெருக்கடியில் இருந்தார். இங்கிலாந்துக்கு எதிராக அவர் விக்கெட்டுகளை கைப்பற்ற முடியாமல் போனதால் ரசிகர்களால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். 

மனரீதியாக அவர் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக, அவரு க்கு மீண்டும் ஒரு வாய்ப்பு ஏன் கொடுக்கக் கூடாது என்ற காரணத்தா ல் கொடுக்கப்பட்டது. அவரும் முக்கியமான இந்த ஆட்டத்தில் நன்றாக பந்து வீசினார். அவரை தேர்வு செய்தது சரிதான். ஒட்டு மொத்த த்தில் சாவ்லாவால் நான் முழு மகிழ்ச்சி அடைந்துள்ளேன். ஹர்பஜன் சிங்கின் பந்து வீச்சு குறித்து நான் கவலைப் படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்