ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 58 தமிழர்கள் கைது

ஞாயிற்றுக்கிழமை, 13 மார்ச் 2011      உலகம்
srilanga peple 0

கொழும்பு,மார்ச்.- 14 - உரிய பயண அனுமதியின்றி ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றதாக 58 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்களை தமிழர்கள் என்று காவல்துறையினர் நேரடியாக தெரிவிக்கவில்லை.  அவர்கள் கொழும்பு நீர் கொழும்பு துறைமுகங்களில் இருந்து சிறிய படகுகள் மூலம் செல்ல முயற்சித்தார்களாம். அவர்கள் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளை சேர்ந்தவர்கள். அவர்களில் 12 பேர் பெண்கள், 6 பேர் குழந்தைகள் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டது.
கொழும்புக்கு 90 கிலோ மீட்டர் வடக்கில் சிலாவம் என்ற இடத்தில் அவர்களை படகில் ஏற்றிச் செல்ல தயாராக இருந்த படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழர்கள் ஆஸ்திரேலியா செல்லவிருப்பது குறித்து போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து போலீசார் சோதனை நடத்தி அனைவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடந்து வருகிறது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: