முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியாறு பிரச்சினை; வருமானவரி அலுவலகத்தில் வக்கீல்கள் போராட்டம்

செவ்வாய்க்கிழமை, 3 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஜன.- 3 - முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா மற்றும் மத்திய அரசுகளின் போக்கை கண்டித்து மதுரை வக்கீல்கள் நேற்று வருமான வரி அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசை கண்டித்தும், மத்திய அரசு மவுனம் காத்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மதுரை மாவட்ட கோர்ட்டு வக்கீல்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று மாவட்ட கோர்ட்டு வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து 100 -க்கும் மேற்பட்டோர் வக்கீல்கள் சங்கதலைவர் தர்மராஜ், செயலாளர் ஏ.கே.ராமசாமி ஆகியோர் தலைமையில் மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்றனர். இந்த பேரணி தல்லாகுளம் வழியாக சென்று பீ.பி.குளம் வருமான வரி அலுவலகம் முன்பு நிறைவடைந்தது. கேரளா மற்றும் மத்திய அரசுகளை கண்டித்து வருமானவரி அலுவலகம் முன்பு அமர்ந்து வக்கீல்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!