சிட்னி டெஸ்ட்: ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 659 ரன்

வெள்ளிக்கிழமை, 6 ஜனவரி 2012      விளையாட்டு
Image Unavailable

 

சிட்னி, ஜன. 6 - இந்திய அணிக்கு எதிராக சிட்னியில் நடைபெற்று வரும் 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 659 ரன்னைக் குவித்து ஆட்டத்தை டெக்ளேர் செய்தது. ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்சில் கேப்டன் மைக்கேல் கிளார்க் முச்சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். தவிர, ஹஸ்சே சதம டித்தார். முன்னதாக ரிக்கி பாண்டிங் சதம் அடித்தார். இதனால் ஆஸி. அணி 600 ரன்னைத் தாண்டி பிரமாண்ட ஸ்கோரை எட்டியது. 

பின்பு 2-வது இன்னிங்சைத் துவக்கிய இந்திய அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்னை எடுத்து இருந்தது. தற்போது 354 ரன் பின்தங்கிய நிலையில் உள்ளது. 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 3-ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. 

முன்னதாக இதில் முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 191 ரன்னை எடுத்தது. கேப்டன் தோனி 57 ரன்னையும், டெண்டுல்கர் 41 ரன்னையும்,சேவாக் 30 ரன்னையும், கோக்லி 23 ரன்னையும் எடுத்தனர். 

பின்பு முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில், 116 ஓவரில், 4 விக்கெட் இழப்பிற்கு 482 ரன்னை எடுத்து இருந்தது. அப்போது கிளார்க் 251 ரன்னுடனும், ஹஸ்சே 55 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 

நேற்று 3-வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி 163 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 659 ரன்னை எடுத்து ஆட்டத்தைடெக்ளேர் செய்தது. அந்த அணி சார்பில் ஒரு வீரர் முச்சதமும், இரண்டு வீரர் கள்  சதமும் அடித்தனர். 

கேப்டன் கிளார்க் தொடர்ந்து ஆடி முச்சதம் அடித்தார். மைக் ஹஸ்சே சதம் அடித்தார். முன்னதாக ரிக்கி பாண்டிங் சதம் அடித்தார். கேப்டன் கிலார்க் முன்னதாக இரட்டை சதம் அடித்தார். கிலார்க் முதலாவது இரட்டை சதத்தை எடுத்தார். நேற்று முதலாவது முச்சதத்தை அடித் தார். 

மைக்கேல் கிளார்க் அதிகபட்சமாக, 468 பந்தில் 329 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். 609 நிமிடம் களத்தில் இருந்த அவர் 39 பவுண்டரியும் ஒரு சிக்சரும் அடித்தார். 

 முதல் நாளன்று 55 ரன் எடுத்து இருந்த ஹஸ்சே தொடர்ந்து ஆடி தனது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 253 பந்தில் 150 ரன்னை எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 16 பவுண்டரியும், 1 சிக்ச ரும் அடக்கம். 

இந்திய அணி தரப்பில், ஜாஹிர்கான் 122 ரன்னைக் கொடுத்த 3 விக்கெட் எடுத்தார். இஷாந்த் சர்மா 144 ரன்னைக் கொடுத்து 1 விககெட் எடுத்தார். உமேஷ் யாதவ், அஸ்வின் மற்றும் சேவாக் ஆகியோருக்கு  விக்கெட் கிடைக்கவில்லை. 

பின்பு 2-வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணி 3- ம் நாள் ஆட்ட நே ர முடிவில், 41 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்னை எடுத்து இருந்தது. அப்போது, காம்பீர் 124 பந்தில் 69 ரன்னை எடுத்து ஆட்டம் இழ                                                              க்காமல் இருந்தார். இதில் 9 பவுண்டரி அடக்கம். 

டெண்டுல்கர் 8 ரன்னுடனன் களத்தில் இருந்தார். முன்னதாக டிராவிட் 73 பந்தில் 29 ரன்னையும், சேவாக் 4 ரன்னையும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இந்திய அணி தற்போது 354 ரன் பின்தங்கி உள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: